SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கச்சா எண்ணெயை தொடர்ந்து ரப்பர் விலை உயர்வால் டயர் விலை அதிகரிக்குமா?

2018-05-18@ 01:43:30

புதுடெல்லி: ரப்பர் விலை அதிகரித்து வருவதால் டயர் விலை உயருமா என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.  கச்சா எண்ணெய் விலையை தொடர்ந்து,  சிந்தடிக் ரப்பர் விலை சர்வதேச சந்தையில் அதிகரித்து வருகிறது. டயர் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் நிறுவனங்கள் உட்பட, ரப்பர் தேவைக்கு இந்தியா  பாதிக்கும் மேலாக இறக்குமதியை மட்டுமே சார்ந்துள்ளது. சிந்தடிக் ரப்பர் இறக்குமதி 20 முதல் 25 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.  இறக்குமதி  செய்யக்கூடிய சிந்தடிக் ரப்பர் விலை ஒரு வாரம் முன்பு டன்னுக்கு 1,600 முதல் 1,700 டாலர் வரை இருந்தது. இது தற்போது 2,000 டாலராக  அதிகரித்துள்ளது. என ரப்பர் உற்பத்தி தொழிற்சாலை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

 நீண்டகாலமாக மந்த நிலையில் இருந்த கார் விற்பனை விறுவிறுப்படைய தொடங்கியுள்ளது. குறிப்பாக பயணிகள் கார் விற்பனை அதிகரித்துள்ளது.  இதனால் டயர் நிறுவனங்களுக்கு ரப்பர் தேவை உயர்ந்துள்ளது. பயணிகள் கார்களில் அதிக வேகம் மற்றும் செயல்திறனுக்காக சிந்தடிக் ரப்பர்களே  பயன்படுத்தப்படுகின்றன.  இதுகுறித்து டயர் தயாரிப்பு தொழில்துறையினர் கூறுகையில், சிந்தடிக் ரப்பர் பற்றாக்குறையை இயற்கை ரப்பர் ஈடுகட்டும்  என்ற நம்பிக்கை உள்ளது. தற்போதைக்கு டயர் விலையை உயர்த்தக்கூடிய அவசியம் ஏற்படவில்லை. ஆனால், டயர் உற்பத்தி துறையினருக்கு இது  இழப்பை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச சந்தையில் ரப்பர் விலை உயர்ந்துள்ள நிலையில், டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பும் சிக்கலை  ஏற்படுத்தியுளளது.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • polis_petrol11

    போலீசார் மீது பெட்ரோல் குண்டு வீச்சு; தூத்துக்குடியில் நீடிக்கிறது பதற்றம்

  • poepl_chennaii11

    சென்னை மக்களை வாட்டி வதைக்கும் கத்திரி வெயில் !...

  • thoothukudi_polissaa

    தூத்துக்குடியில் 2-வது நாளாக துப்பாக்கிச் சூடு : போலீஸ் வாகனங்களுக்கு தீவைப்பு

  • duchess_meganmarkel

    திருமணத்திற்கு பிறகு முதன்முறையாக டச்சஸ் ஆப் சுசக்ஸ் தோற்றத்துடன் உலா வந்த மேகன் மார்க்கல்

  • hyderabad_bustop11

    ஏசி, ஏடிஎம், காபி இயந்திரங்கள்,வைஃபை உள்ளிட்ட வசதிகளுடன் நவீன பேருந்து நிறுத்தம் :ஹைதராபாத்தில் வினோதம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்