SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கோவை, திருப்பூர் மாவட்டத்தில் விசைத்தறி துணி உற்பத்தி 20 சதவீதம் குறைப்பு : 40 ஆயிரம் விசைத்தறிகள் நிறுத்தம்

2018-05-18@ 01:42:18

கோவை: பஞ்சு, நூல் விலை உயர்வால் விசைத்தறி துணிக்கு உற்பத்தி செலவு அதிகரித்து, துணிக்கு விலை கிடைக்கவில்ைல. இதனால் துணி  உற்பத்தியை 20 சதவீதம் குறைத்துள்ளனர். இதனால் கோவை, திருப்பூர் மாவட்டத்தில் 40 ஆயிரம் விசைத்தறிகள் இயங்கவில்லை.  கோவை, திருப்பூர் மாவட்டத்தில் 2 லட்சம் விசைத்தறிகள் உள்ளது. இதன் மூலம் தலா 70 மீட்டர் வீதம் 1.40 கோடி மீட்டர் துணி உற்பத்தியாகி  வந்தது. இவை வட மாநிலத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு மீட்டர் ரூ.30 முதல் ரூ.50 வரை விற்கப்படுகிறது. இந்நிலையில், கடந்த ஒரு  மாதமாக விசைத்தறி துணி விலை மீட்டருக்கு ரூ.3 வரை குறைந்துள்ளது. இதனால் நஷ்டம் ஏற்படுவதாக கருதும் உற்பத்தியாளர்கள், நஷ்டத்திற்கு  விற்பனை செய்வதை தவிர்த்துள்ளனர். விலை சீரான பின்னர் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளனர். இதன் காரணமாக, கோவை, திருப்பூர்  மாவட்டத்தில் பல கோடி மதிப்பிலான துணிகள் தேக்கமடைந்துள்ளன.

 அதைத்தொடர்ந்து, உற்பத்தியாளர்கள் விசைத்தறி துணி உற்பத்தியை 20 சதவீதம் குறைத்துள்ளனர். இதன் காரணமாக கோவை, திருப்பூர்  மாவட்டத்தில் உள்ள 2 லட்சம் விசைத்தறிகளில் 40 ஆயிரம் விசைத்தறிகள் இயங்காமல் நிறுத்தப்பட்டுள்ளது. விசைத்தறிகள் மூலம் கூலிக்கு நெசவு  செய்யும் விசைத்தறியாளர்கள் மற்றும் அதில் பணியாற்றும் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.  இதுகுறித்து விசைத்தறி ஜவுளி  உற்பத்தியாளர்கள் கூறியதாவது: பஞ்சு விலை உயர்வால், கோம்பர் கழிவு பஞ்சு விலை உயர்ந்துள்ளது.

இதனால் நூல் உற்பத்தி செலவு அதிகரித்து, நூல் விலையும் உயர்ந்துள்ளது. இதனால் துணிக்கான உற்பத்தி செலவு அதிகரித்துள்ளது. ஆனால்,  அதற்கேற்ப துணி விலையை உயர்த்த முடியவில்லை. இதனால் உற்பத்தியை குறைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.  இரண்டு மாவட்டத்திலும்  உள்ள 40 சதவீத விசைத்தறிகளுக்கு, ஒரு வாரம் விட்டு ஒரு வாரமும், சில விசைத்தறிகளுக்கு வாரத்தில் 3 நாட்கள் மட்டும் இயக்கப்படுகிறது. பஞ்சு  மற்றும் கோம்பர் கழிவு பஞ்சு விலை உயர்வையும், நூல் விலையையும் கட்டுப்படுத்த வேண்டும், விசைத்தறி துணிக்கு சீரான விலை கிடைக்க,  கோவை மாவட்டம் சோமனூர் மற்றும் திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியில் விசைத்தறி ஜவுளி விற்பனை மையம் அமைக்க வேண்டும். இதன்  மூலம் விசைத்தறி துணிக்கு நியாயமான விலை கிடைக்க வாய்ப்புள்ளது. இவ்வாறு விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-10-2018

    21-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • dussehraa_11

    நாடு முழுவதும் தசரா பண்டிகை கோலாகல கொண்டாட்டம்

  • 20-10-2018

    20-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • tirupathivavacha

    திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம் : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு

  • kulasaidasaraeight

    வெகு விமர்சையாக கொண்டாப்பட்டு வரும் குலசேகரபட்டிணம் தசரா திருவிழா

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்