SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வரத்து அதிகரிப்பால் மாம்பழம் விலை சரிவு

2018-05-18@ 01:41:06

 பட்டிவீரன்பட்டி: வரத்து அதிகரிப்பால் மாம்பழம் விலை சரிந்துள்ளது. இதனால் விவசாயிகள் கவலையில் உள்ளனர். மதுரை, திண்டுக்கல், தேனி  சுற்றுவட்டார  பகுதிகளில் இருந்து தமிழகமெங்கும் அதிகளவில் மாங்காய், மாம்பழங்கள் விற்பனைக்காக  கொண்டு செல்லப்படுகின்றன. வழக்கமாக,  டிசம்பர், ஜனவரி மாதங்களில் மா  மரங்களில் பூக்கள் பூக்க ஆரம்பிக்கும். பிப்ரவரியில் காய்கள் பிடிக்க  ஆரம்பித்து மார்ச் இறுதியில் காய்கள்  அறுவடை செய்யப்படும். தொடர்ந்து  ஏப்ரல் இறுதியில் சீசன் துவங்கி வரத்து அதிகரிக்க ஆரம்பிக்கும்.

தற்போது  சீசன் என்பதால் தமிழகத்தின் பல்வேறு மார்க்கெட்டிற்கு மாங்காய் வரத்து தொடர்ந்து அதிகரித்து  வருகிறது. இதனால் விலை  வீழ்ச்சியடைந்து விற்பனையாகி வருகிறது. திண்டுக்கல் மாவட்டம், பட்டிவீரன்பட்டி அருகே எம்.வாடிப்பட்டி, அய்யம்பாளையம், மருதாநதி அணை  கோம்பை பகுதிகள், தேவரப்பன்பட்டி, தாண்டிக்குடி மலையடிவார மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஹெக்டேர் பரப்பளவில் மா  விவசாயம் நடந்து வருகிறது. தற்போது விளைச்சல் அதிகரித்துள்ளதால், மாங்காய் விலை குறைந்துள்ளது. எதிர்பார்த்த லாபம் கிடைக்காததால்  விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • PlasticawarenessLondon

    லண்டன் பூங்காவில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு நிகழ்ச்சி

  • stalin_arrestkaithu11

    தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக மதுராந்தகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட ஸ்டாலின் கைது

  • metrorayil_train11

    டெல்லியில் ஜனக்புரி மேற்கு - கால்காஜி மந்திர் இடையேயான மெட்ரோ ரயில் சேவை சோதனை ஓட்டம்

  • northkores_minesexplodes1

    அணு ஆயுத சோதனைத்தளத்தில் உள்ள சுரங்கங்களை வெடிக்க செய்தது வட கொரியா!!

  • 25-05-2018

    25-05-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்