SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பருவம் தவறி பெய்யும் மழையால் செங்கல் உற்பத்தி 90% பாதிப்பு

2018-05-18@ 01:40:18

கோவை: கோவையில் கடந்த 2 வாரத்தில் பல நாட்கள் மாலை மற்றும் இரவு நேரங்களில் பெய்து வரும் கனமழையால் செங்கல் உற்பத்தி மற்றும்  விற்பனை 90 சதவீதம் பாதிப்பு அடைந்துள்ளது.  கோவை அருகே சின்னத்தடாகம், கணுவாய், நஞ்சுண்டபுரம், பெரிய தடாகம், மாங்கரை, நெ.24  வீரபாண்டி ஆகிய பகுதிகளில் 100க்கு மேற்பட்ட செங்கல் சூளைகள் உள்ளது. இங்கு ஆயிரத்திற்கு மேற்பட்ட தொழிலாளர்கள் தங்கி பணிபுரிகின்றனர்.  இங்கு உற்பத்தியாகும் செங்கற்களில் தினசரி சராசரியாக 200 லாரி லோடு (தலா 3 ஆயிரம் செங்கல்)  கோவை, நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு  பகுதிகளில் நடைபெறும் கட்டுமான பணிகளுக்கு செல்கிறது.

மார்ச் முதல் ஆகஸ்ட் வரையிலான 6 மாதங்கள் கோடை காலமாக உள்ளதால், செங்கல் உற்பத்தி தீவிரமாக நடைபெறும். பொதுவாக செங்கல்லிற்கு  தேவையான மண்ணை தண்ணீர் ஊற்றி சகதியாக மாற்றி, அதை அச்சில் சதுரமாக வெட்டி, வெயிலில் உலர வைத்து, பின்னர் அவற்றை சூளையில்  அடுக்கி, நெருப்பில் சுட்டு செங்கற்களாக உற்பத்தி செய்ய குறைந்தபட்சம் ஒரு மாதமாகும். தினசரி 200 முதல் 300 லோடு உற்பத்தியாவது வழக்கம்.  கடந்த ஒரு ஆண்டாக கட்டுமான பணிக்கு தேவையான ஆற்று மணல் வரத்து குறைவு, ஆற்று மணல் விலை 3 மடங்கு உயர்வு காரணமாக கட்டுமான  பணிகள் முடங்கியதன் எதிரொலியாக, செங்கல் விற்பனையும் 50 சதவீதம் பாதிக்கப்பட்டது.

இந்நிலையில், கடந்த 2 மாதமாக கட்டமான பணிகளில் எம்.சாண்ட் மணல் பயன்பாடு அதிகரிப்பால், கட்டுமான பணிகள் ஓரளவு அதிகரித்துள்ளது.  இதனால் கடந்த 2 மாதமாக செங்கல் விற்பனையும் அதிகரித்தது. ஆனால், திடீரென்று கடந்த 2 வாரமாக கோவையில் தினசரியும், ஓரிரு நாள்  இடைவெளியிலுமாக மாலை மற்றும் இரவு நேரங்களில் கன மழை பெய்து வருகிறது.

இதனால் செங்கல் தயாரிப்பதற்கு இருப்பு வைக்கப்பட்டுள்ள மணலும், அச்சில் வார்க்கப்பட்ட செங்கல்களும் மழையில் கரைந்து வருகிறது. வெயில்  இல்லாததால் செங்கற்களை காய வைக்க முடியவில்லை. செங்கல் சூளைகளிலும் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் கடந்த 2 வாரமாக செங்கல்  உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து செங்கல் உற்பத்தியாளர்கள் கூறுகையில், ‘மே மாதத்தில் கோடை மழை லேசாக இருக்கும். ஆனால்  வழக்கத்திற்கு மாறாக, வடகிழக்கு பருவமழை போல், பருவம் தவறி பெய்யும் மழையால் செங்கல் உற்பத்தி 90 சதவீதம் முடங்கியுள்ளது.  மழைகாரணமாக கட்டுமானமும் முடங்கியுள்ளதால், ஏற்கனவே இருப்பில் உள்ள செங்கற்களும் விற்பனையாகாமல் தேங்கியுள்ளன. இதனால் வெளி  மாவட்டங்களை சேர்ந்த தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 19-01-2019

  19-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • ChillaiKalanKashmir

  கடுமையான பனிப்பொழிவால் வெண் நிற ஆடை போர்த்தியது போல் காட்சியளிக்கும் காஷ்மீர்: கண்களை குளிர்விக்கும் புகைப்படங்கள்

 • bombblastcolombia

  கொலம்பியாவில் கார் வெடிகுண்டு வெடித்து விபத்து: 9 பேர் உயிரிழந்த பரிதாபம்!

 • chinafiredrone

  மின்கம்பிகளில் தொங்கும் குப்பைகளை அழிக்க தீயை உமிழும் ட்ரோன் சீனாவில் கண்டுபிடிப்பு!

 • horse_apain12

  விலங்குகளை சுத்தப்படுத்தும் திருவிழா : நெருப்புக்குள் குதிரைகளை செலுத்தும் ஸ்பெயின் மக்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்