SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஜிஎஸ்டியால் உதிரிபாக விலை உயர்வு : லேப்டாப், கம்ப்யூட்டர் சர்வீஸ் செய்ய கொண்டு வருவோர் எண்ணிக்கை சரிவு

2018-05-18@ 01:39:03

புதுக்கோட்டை: ஜிஎஸ்டியால் சர்வீஸ் சென்டர்களுக்கு பழுதடைந்த கம்ப்யூட்டர்களை கொண்டுவருவது குறைந்துள்ளது.  இந்தியாவில் ஜிஎஸ்டி  அறிமுகப்படுத்தியதில் இருந்து உணவு உள்ளிட்ட அனைத்து விதமான பொருட்களின் விலையும் பல  மடங்கு உயர்ந்தது. அதில் மென்பொருள் உதிரி  பாகங்களும் ஒன்று. ஒரு கம்ப்யூட்டர் ஹார்டு டிஸ்க், ஆடியோ ஜாக் பிசிபி, டிசி ஜாக், ஐசி சிப், எல்சிடி பிராக்கெட், எல்சிடி கேபிள், மதர்போர்டு,  ஸ்பீக்கர்ஸ், யுஎஸ்பி போர்ட், வெப் கேம், உள்ளிட்ட பல்வேறு வகையான உதிரி பாகங்கள் உள்ளன. இதில் பழுது ஏற்பட்டு சர்வீஸ் மையத்தில் புதிய  உதிரி பாகங்களை பொருத்தினால்  அதற்கான வரியையும் வாடிக்கையாளர்தான் செலுத்த வேண்டும். தற்போது  கணிப்பொறி, லோப்டாப் போன்ற  சாதனங்களில் உள்ள உதிரிப்பாகங்களுக்கு 18 சதவீத ஜிஎஸ்டி விதிக்கப்பட்டுள்ளது.  

முன்பு இந்த வகையான உதிரிபாகங்களுக்கு 14 சதவீதம் வரி இருந்துள்ளது. மேலும் மானிட்டர்கள், பிரின்டர்களுக்கு 28 சதவீதம் ஜிஎஸ்டி வரி  விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பழுதுநீக்க வருவோர் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளாக சர்வீஸ் மையங்களின் உரிமையாளர்கள்  தெரிவிக்கின்றனர்.  இதுகுறித்து சர்வீஸ் மைய உரிமையாளர்் கூறியதாவது: கடந்த 6 மாதமாக இந்த தொழில் மிகவும் மந்தமடைந்துள்ளது. குறிப்பாக  மாநில அரசு கடந்த 7 ஆண்டுகளாக இலவச லேப்டாப் வழங்கி வருகிறது.  அனைத்து அரசு அலுவலகங்கள், வர்த்தக நிறுவனங்களிலும் கம்ப்யூட்டர்  பயன்பாடு அதிகரித்துவருகிறது.

 சர்வீஸ் மையத்துக்கு பழுது நீக்க தொடர்ந்து ஆட்கள் வந்துகொண்டு இருந்தனர். ஆனால் தற்போது அனைத்து விதமான உதிரிபாகங்களின் விலை 4  சதவீதத்தில் இருந்து 5 சதவீதம் வரை  உயர்ந்துவிட்டது. இதனால் பழுது நீக்க வருவோர்கள் மிகவும் அடிப்படை பழுதுகளை மட்டும் நீக்கிவிட்டு  மற்றவற்றை செய்யாமல் செல்கின்றனர். குறிப்பாக ஹார்டு டிஸ்க், ஸ்பீக்கர் பழுது என்றால் ஹார்டு டிஸ்க்கை மட்டும் பழுது நீக்கிவிட்டு செலவை  குறைக்க ஸ்பீக்கர் பழுதை நீக்க வேண்டாம் என்று வாடிக்கையாளர்கள் தெரிவிக்கின்றனர். செலவு அதிகம் செய்து பழுதுபார்ப்பதை விட புதிதாகவே  வாங்கி விடலாம் என்ற முடிவுக்கு வந்து விடுகின்றனர்.  இதற்கு முக்கிய காரணம் 18 சதவீத ஜிஎஸ்டிதான். இவ்வாறு அவர் கூறினார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-01-2019

    19-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • ChillaiKalanKashmir

    கடுமையான பனிப்பொழிவால் வெண் நிற ஆடை போர்த்தியது போல் காட்சியளிக்கும் காஷ்மீர்: கண்களை குளிர்விக்கும் புகைப்படங்கள்

  • bombblastcolombia

    கொலம்பியாவில் கார் வெடிகுண்டு வெடித்து விபத்து: 9 பேர் உயிரிழந்த பரிதாபம்!

  • chinafiredrone

    மின்கம்பிகளில் தொங்கும் குப்பைகளை அழிக்க தீயை உமிழும் ட்ரோன் சீனாவில் கண்டுபிடிப்பு!

  • horse_apain12

    விலங்குகளை சுத்தப்படுத்தும் திருவிழா : நெருப்புக்குள் குதிரைகளை செலுத்தும் ஸ்பெயின் மக்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்