SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கொலை வழக்கில் 6 ஆண்டுகளாக தலைமறைவு: சகோதரர்கள் 3 பேர் கைது

2018-05-18@ 01:16:57

பூந்தமல்லி: சென்னை மதுரவாயல் அடுத்த நெற்குன்றம் பகுதியில் கடந்த 2009ம் ஆண்டு அப்பகுதியில் பாரில் இரு தரப்பினர் மது அருந்திக்கொண்டு இருந்தனர். அப்போது, மணிகண்டன் (28), சுதாகர் (34) ஆகிய  இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில், ஒருவர் மீது ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர்.  இதனால் ஆத்திரமடைந்த சுதாகர் தனது அறையில் இருந்த கன்னியாகுமரியை சேர்ந்த நாகராஜ் (39), முத்துராஜ் (36), விஜயகுமார் (49) உள்ளிட்ட 5 பேர் துணையுடன் மணிகண்டனை அடித்து கொன்றனர். இதுகுறித்து மதுரவாயல் போலீசார் வழக்கு பதிவு செய்து 5 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதில் வழக்கு விசாரணையின் போது, சுதாகர் இறந்து விட்டார்.  மற்ற நான்கு பேரும் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்து, 2012ம் ஆண்டு முதல் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்தனர். இதையடுத்து, மதுரவாயல் இன்ஸ்பெக்டர் ஜார்ஜ் மில்லர் தலைமையில் தனிப்படைகள் அமைத்து தலைமறைவாக இருந்து வந்த குற்றவாளிகளை தேடி வந்த நிலையில் கன்னியாகுமரியில் பதுங்கி இருந்த நாகராஜ், முத்துராஜ், விஜயகுமார் ஆகிய 3 பேரை நேற்று முன்தினம் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதில், மூன்று பேரும் சகோதரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், தலைமறைவாக உள்ள ஒருவரை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 16-08-2018

    16-08-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 15-08-2018

    15-08-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • chinaearthquake

    சீனாவின் யுன்னான் மாகாணத்தில் நிலநடுக்கம்: 18 பேர் காயம்

  • meteorshower

    ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் விண்கல் மழை: வானில் நிகழ்ந்த அதிசயம்

  • indonesiaafterquake

    இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் பாதிப்பு: மக்களின் வாழ்வாதாரம் முடக்கம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்