SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கணவருடன் சென்ற பெண்ணிடம் செயின் பறிப்பு: வழிப்பறி திருடர்களுக்கு தர்ம அடி: சிந்தாதிரிப்பேட்டையில் பரபரப்பு

2018-05-18@ 01:15:53

சென்னை: கணவருடன் பைக்கில் ெசன்ற பெண்ணிடம் செயின் பறித்த பைக் கொள்ளையர்களை பொது மக்கள் மடக்கி பிடித்து அடித்து உதைத்த சம்பவம் சிந்தாதிரிப்பேட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை சிந்தாதிரிப்பேட்டை மீன் மார்க்கெட் அருகே தம்பதியினர் பைக்கில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, எழும்பூரில் இருந்து சிந்தாதிரிப்பேட்டை நோக்கி இரண்டு வாலிபர்கள் ஸ்கூட்டரில் வந்தனர். திடீரென ஸ்கூட்டரில் வந்த வாலிபர்கள் தம்பதி வந்த பைக் மீது வேகமாக மோதினர். இதில் நிலை தடுமாறி பைக்கில் வந்த தம்பதி கீழே விழுந்தனர். அப்போது, ஸ்கூட்டரில் வந்த வாலிபர்கள் பெண்ணின் கழுத்தில் இருந்து செயினை பறித்து கொண்டு ஸ்கூட்டரில் தப்ப முயன்றனர்.

இதை பார்த்த பொதுமக்கள், இரண்டு வாலிபர்களையும் மடக்கி சரமாரியாக அடித்து உதைத்து சிந்தாதிரிப்பேட்டை போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில், ஐஸ் அவுஸ் செல்லம்மாள் தோட்டத்தை சேர்ந்த அன்பரசு (23), ராஜேஷ் (19) என தெரியவந்தது. இவர்கள் மீது ஐஸ் அவுஸ், திருவல்லிக்கேணி காவல் நிலையங்களில் வழிப்பறி உள்ளிட்ட வழக்குகள் உள்ளது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் இரண்டு வாலிபர்களையும் கைது செய்து அவர்களிடம் இருந்து 6 செல்போன், 2 சவரன் செயின் மற்றும் ஸ்கூட்டர் பறிமுதல் செய்யப்பட்டது.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • polis_petrol11

    போலீசார் மீது பெட்ரோல் குண்டு வீச்சு; தூத்துக்குடியில் நீடிக்கிறது பதற்றம்

  • poepl_chennaii11

    சென்னை மக்களை வாட்டி வதைக்கும் கத்திரி வெயில் !...

  • thoothukudi_polissaa

    தூத்துக்குடியில் 2-வது நாளாக துப்பாக்கிச் சூடு : போலீஸ் வாகனங்களுக்கு தீவைப்பு

  • duchess_meganmarkel

    திருமணத்திற்கு பிறகு முதன்முறையாக டச்சஸ் ஆப் சுசக்ஸ் தோற்றத்துடன் உலா வந்த மேகன் மார்க்கல்

  • hyderabad_bustop11

    ஏசி, ஏடிஎம், காபி இயந்திரங்கள்,வைஃபை உள்ளிட்ட வசதிகளுடன் நவீன பேருந்து நிறுத்தம் :ஹைதராபாத்தில் வினோதம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்