SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

முன்விரோத தகராறில் வாலிபரின் கால் உடைப்பு 4 பேர் கைது

2018-05-18@ 01:11:46

வேளச்சேரி: வேளச்சேரியில் முன்விரோத தகராறில் வாலிபரின் காலை உடைத்த 4 பேர் கைது செய்யப்பட்டனர். வேளச்சேரி சித்தாலப்பாக்கம் அடுத்த  அரசன்கழனியை சேர்ந்தவர் கவுதம் (23).  அதேப்பகுதியை சேர்ந்தவர்கள் ஜோஸ்வா  (20), இசக்கி (22), அசோக்குமார் (24), மரியசெல்வம் (20)   ஆகியோருக்கு இடையே  வீட்டின் அருகே வாகனம் நிறுத்துவது தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது.  இந்நிலையில், கடந்த 10ம் தேதி இரு தரப்புக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறில் 4 பேரும் சேர்ந்து  கவுதமை உருட்டுக்கட்டையால் தாக்கி உள்ளனர்.

இதில், கவுதம் கால் உடைந்து படுகாயமடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். புகாரின்பேரில் பள்ளிக்கரணை போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த 4 பேரையும் நேற்று கைது செய்தனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-01-2019

    19-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • ChillaiKalanKashmir

    கடுமையான பனிப்பொழிவால் வெண் நிற ஆடை போர்த்தியது போல் காட்சியளிக்கும் காஷ்மீர்: கண்களை குளிர்விக்கும் புகைப்படங்கள்

  • bombblastcolombia

    கொலம்பியாவில் கார் வெடிகுண்டு வெடித்து விபத்து: 9 பேர் உயிரிழந்த பரிதாபம்!

  • chinafiredrone

    மின்கம்பிகளில் தொங்கும் குப்பைகளை அழிக்க தீயை உமிழும் ட்ரோன் சீனாவில் கண்டுபிடிப்பு!

  • horse_apain12

    விலங்குகளை சுத்தப்படுத்தும் திருவிழா : நெருப்புக்குள் குதிரைகளை செலுத்தும் ஸ்பெயின் மக்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்