SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பணியில் கவனக்குறைவு குண்டாஸ் கைதியை விடுவித்த புழல் சிறை வார்டன் சஸ்பெண்ட்: கைது செய்ய போலீசார் தீவிரம்

2018-05-18@ 00:53:15

புழல்: பணியில் கவனக்குறைவாக குண்டாஸ் ஆணையை முறையாக படிக்காமல், விடுவிப்பு ஆணை என நினைத்து கைதியை விடுவித்த புழல் சிறை வார்டன் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். சென்னை தண்டையார்பேட்டை போலீசார் கடந்த 2017ம் ஆண்டு ஒரு கொலை வழக்கில்  ரவி (எ) ரவிச்சந்திரன் (எ) மாங்கா ரவி (26) என்பவரை கைது செய்து, சென்னை புழல் மத்திய சிறையில் அடைத்தனர். மேலும், தொடர்ந்து குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட ரவி மீது கடந்தாண்டு டிசம்பர் 23ம் தேதி குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது. இதையடுத்து ரவி, தன் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என சென்னை மாநகர கமிஷனரிடம் முறையிட்டார். ஆனால், அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ததை ரத்து செய்ய கமிஷனர் மறுத்துவிட்டார். மேலும், அவர் மீதான குண்டர் சட்டத்தை உறுதி செய்தார்.

இதற்கான உத்தரவு கடந்த மாதம் 28ம் தேதி புழல் சிறை வார்டன் பிரதீப் என்பவரிடம் வழங்கப்பட்டது. இந்த உத்தரவை புழல் சிறை வார்டன் பிரதீப், உடனடியாக சிறைத்துறை கூடுதல் கண்காணிப்பாளர் சேகரனிடம், வழங்கினார். இந்த உத்தரவை பார்த்த சிறைத்துறை கூடுதல் கண்காணிப்பாளர் சேகரன், அதை சரியாக படித்து பார்க்காமல் விடுவிக்கும் உத்தரவு என நினைத்து ரவியை உடனடியாக விடுதலை செய்துவிட்டார். இதைதொடர்ந்து ரவி வெளியில் சுற்றி திரிவதை பார்த்ததும், அவரால் பாதிக்கப்பட்டவர்கள், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதில், குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட ரவி, எந்த அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டார் என குறிப்பிட்டு இருந்தனர்.

இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், இதுபற்றி சிறைத்துறை இயக்குனருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. இதுதொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்திய பின்னர், கலெக்டரின் உத்தரவை தவறுதலாக கருதி ரவி விடுதலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதற்கிடையில் சிறைத்துறை கூடுதல் கண்காணிப்பாளர் சேகரன், பணி ஓய்வு பெற்றார். இதுகுறித்து சிறைத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு, இந்த சம்பவம் தொடர்பாக சிறை வார்டன் பிரதீப்பை நேற்று தற்காலிக பணிநீக்கம் செய்து உத்தரவிட்டனர்.

இதுகுறித்து, புழல் சிறை ஜெயிலர் உதயகுமார் தண்டையார்பேட்டை போலீசில் நேற்று புகார் அளித்தார். அதில், சிறையில் இருந்து, தவறுதலாக விடுதலை செய்யப்பட்ட ரவியை உடனே பிடித்து சிறைத்துறையிடம் ஒப்படைக்க வேண்டும். மேலும், ஓய்வுப்பெற்ற கூடுதல் கண்காணிப்பாளர் சேகரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார். போலீசார், தலைமறைவாக உள்ள ரவியை வலைவீசி தேடி வருகின்றனர்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 27-05-2018

    27-05-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • modi_bahvan_bang

    வங்காளதேசம் பவன் ஆய்வகத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!

  • proteststerliteissue

    சென்னையில் தமிழ்நாடு கலை இலக்கிய ஊடக செயற்பாட்டார்கள் கூட்டமைப்பு போராட்டம்

  • LibyaCarbombAttack

    லிபியாவின் பெங்காஸி நகரில் கார் குண்டு தாக்குதல்: 7 பேர் பரிதாபமாக உயிரிழப்பு

  • Libyacarbomb7

    லிபியாவில் நடத்தப்பட்ட கார் குண்டு தாக்குதலில் 7 பேர் உயிரிழப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்