SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திரிசூலம், ஸ்டான்லி அரசு மருத்துவ கல்லூரி அருகில் பயங்கரம் 2 வாலிபர்கள் அடித்துக் கொலை: 4 பேர் கைது

2018-05-18@ 00:50:40

சென்னை: திரிசூலம் மற்றும் ஸ்டான்லி அரசு மருத்துவ கல்லூரி மைதானம் அருகில், 2 வாலிபர்கள் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை திரிசூலம் இலுப்ப தோப்பு பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (25). இவர் மினி லாரி ஓட்டி வந்தார். கடந்த 5 நாட்களுக்கு முன்பு திரிசூலத்தில் உள்ள காலி மைதானத்தில் சுரேஷ் மதுஅருந்தி கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த சென்னை மூவரசன்பட்டு கிருஷ்ணா நகரை சேர்ந்த ராமச்சந்திரன் உள்ளிட்ட 4 பேர், ‘‘நீ யார், இங்கு வந்து மது அருந்துகிறாய்’’ என்று கேட்டு சுரேஷிடம் கடும் வாக்குவாதம் செய்துள்ளனர். பின்னர் அந்த கும்பல், சுரேஷை சரமாரியாக அடித்து உதைத்துவிட்டு சென்றுவிட்டனர்.

இந்நிலையில், 2 நாட்களுக்கு பிறகு நண்பர்கள் சிலருடன் சுரேஷ் மீண்டும் அதே பகுதிக்கு வந்துள்ளார். அந்த நேரத்தில் அவ்வழியாக வந்த ராமச்சந்திரனை அவர்கள் சுற்றிவளைத்து தாக்கியதில் ராமச்சந்திரனின் கை முறிந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் மீண்டும் அதே இடத்தில் நடந்து வந்த சுரேஷை, ராமச்சந்திரன் மற்றும் அவரது நண்பர்கள் கீழ்க்கட்டளையை சேர்ந்த திலீப் (24), பல்லாவரத்தை சேர்ந்த கலைமணி (27), ராஜா (21) ஆகியோர் மறித்து உருட்டுக்கட்டை மற்றும் பீர் பாட்டிலால் சரமாரியாக தாக்கினர். இதில், மண்டை உடைந்து ரத்தவெள்ளத்தில் சுரேஷ் துடித்தார்.

இதுகுறித்து, தகவலறிந்ததும் மடிப்பாக்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். உயிருக்கு போராடிக்கொண்டிருந்த சுரேஷை மீட்டு, தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சுரேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து, இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் வழக்குப்பதிவு செய்து விசாரித்தார். கொலை சம்பந்தமாக ராமச்சந்திரன், திலீப், கலைமணி, ராஜா ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மற்றொரு சம்பவம்: ராயபுரம் ஸ்டான்லி அரசு மருத்துவக்கல்லூரி நடைபாதை அருகில் கடந்த 15ம் தேதி சுமார் 30 வயது மதிக்கத்தக்க நபர் கால் முட்டியில் காயத்துடன் இறந்து கிடந்தார். ராயபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, அவரது சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், போலீசார் வழக்குப்பதிவு செய்து, தீவிரமாக விசாரித்து வந்தனர். இந்நிலையில் பிரேத பரிசோதனை அறிக்கையில் இறந்து கிடந்த வாலிபர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரிய வந்துள்ளது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு கொலை செய்யப்பட்ட வாலிபர் யார்? எப்படி இறந்தார்? என்று, விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • chinaearthquake

    சீனாவின் யுன்னான் மாகாணத்தில் நிலநடுக்கம்: 18 பேர் காயம்

  • meteorshower

    ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் விண்கல் மழை: வானில் நிகழ்ந்த அதிசயம்

  • indonesiaafterquake

    இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் பாதிப்பு: மக்களின் வாழ்வாதாரம் முடக்கம்

  • sijaapanda

    சீனாவில் சிஜ்ஜா பாண்டா கரடியின் 12-வது பிறந்தநாள் கொண்டாட்டம்

  • inpendencedayrehearsal

    செங்கோட்டையில் சுதந்திர தின அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்