SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மருத்துவமனையில் நுழைந்து ரியல் எஸ்டேட் அதிபர் கழுத்தறுத்து கொலை

2018-05-18@ 00:50:34

பழநி, :  திண்டுக்கல் அருகே மருத்துவமனையில் ரியல் எஸ்டேட் அதிபர் கழுத்தை அறுத்து கொல்லப்பட்டார். திண்டுக்கல் மாவட்டம், பழநி டவுன்,  சண்முகபுரத்தில் வசித்தவர் ரவிராஜா (54). ரியல் எஸ்டேட் அதிபர். சர்க்கரை நோய் தொடர்பாக பழநியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை  பெற்று வந்தார். நேற்று பிற்பகல் மருத்துவமனைக்குள் ஒரு நபர் கத்தியுடன் நுழைந்து, அறையில் இருந்த ரவிராஜாவின் கழுத்தை அறுத்துள்ளார்.  பின்னர், ரவிராஜாவின் காரை எடுத்துக்கொண்டு தப்பினார்.  

 சம்பவ இடத்திற்கு வந்த பழநி போலீசார் சிசிடிவி பதிவுகளை ஆராய்ந்தனர். இந்தகாட்சியை வைத்து. தாராபுரம் சோதனைச்சாவடியில் காருடன்  சென்றவரை மடக்கி பிடித்தனர். விசாரணையில், சென்னையை சேர்ந்த சந்துரு என்பதும் ரவிராஜாவிடம் டிரைவராக வேலை பார்த்த அவரை  வேலையில் இருந்து நிறுத்தியதால் இந்த சம்பவத்தில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இந்நிலையில், மதுரை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட  ரவிராஜா சிகிச்சை பலனின்றி இறந்தார். இதையடுத்து, சந்துருவை போலீசார் ைகது செய்தனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-01-2019

    19-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • ChillaiKalanKashmir

    கடுமையான பனிப்பொழிவால் வெண் நிற ஆடை போர்த்தியது போல் காட்சியளிக்கும் காஷ்மீர்: கண்களை குளிர்விக்கும் புகைப்படங்கள்

  • bombblastcolombia

    கொலம்பியாவில் கார் வெடிகுண்டு வெடித்து விபத்து: 9 பேர் உயிரிழந்த பரிதாபம்!

  • chinafiredrone

    மின்கம்பிகளில் தொங்கும் குப்பைகளை அழிக்க தீயை உமிழும் ட்ரோன் சீனாவில் கண்டுபிடிப்பு!

  • horse_apain12

    விலங்குகளை சுத்தப்படுத்தும் திருவிழா : நெருப்புக்குள் குதிரைகளை செலுத்தும் ஸ்பெயின் மக்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்