SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இந்திய அணியில் எல்லோரும் கோஹ்லிதான்: சொல்கிறார் ஆப்கன் கேப்டன்

2018-05-18@ 00:41:23

புதுடெல்லி: ‘இந்திய அணியில் எல்லா வீரர்களும் விராட் கோஹ்லி தான்’ என ஆப்கானிஸ்தான் கேப்டன் அஸ்கர் ஸ்டைனிக்ஜய் கூறியுள்ளார். கிரிக்கெட்டில் டெஸ்ட் போட்டியில் விளையாடும் 12வது நாடாக ஆப்கானிஸ்தான் இணைய உள்ளது. அந்த அணி, இந்தியாவுக்கு எதிராக ஒரே ஒரு டெஸ்டில் விளையாட தற்போது டெல்லியில் பயிற்சி மேற்கொண்டு வருகிறது. இப்போட்டி அடுத்த மாதம் 14ம் தேதி பெங்களூருவில் தொடங்குகிறது. இங்கிலாந்து கவுன்டி போட்டியில் பங்கேற்பதால், இப்போட்டியில் இந்திய அணி கேப்டன் விராட் கோஹ்லி விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், போட்டி குறித்து ஆப்கானிஸ்தான் கேப்டன் அஸ்கர் ஸ்டைனிக்ஜய் நேற்று அளித்த பேட்டியில், ‘‘இந்திய அணியில் எல்லாருமே சிறந்த வீரர்கள். எல்லோருமே விராட் கோஹ்லிதான். எனவே, கோஹ்லி இல்லாவிட்டாலும் இந்திய அணி பலம் வாய்ந்த நம்பர்-1 அணியே. நாங்கள் இந்திய அணிக்கு எதிராகத்தான் விளையாட வந்திருக்கிறோம். கோஹ்லிக்கு எதிராக அல்ல. இந்திய ஆடுகளங்கள் சுழல்பந்துவீச்சுக்கு சாதகமானவை. இது எங்களுக்கு கூடுதல் நம்பிக்கை அளிக்கிறது. எங்கள் அணியில் ரஷித்கான், முஜீப் உர் ரஹ்மான் ஆகிய சிறந்த சுழற்பந்துவீச்சாளர்கள் உள்ளனர்.

வெற்றி, தோல்வி முக்கியமில்லை. சிறப்பான ஆட்டத்தை எதிர்நோக்கி களமிறங்குவோம். போர் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்கு நடுவே எங்களின் வெற்றி, எங்களின் நாட்டு மக்களுக்கு மகிழ்ச்சியை தருகிறது. அவர்களுக்கு தொடர்ந்து மகிழ்ச்சி அளிக்க நாங்கள் பாடுபடுவோம்’’ என்றார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-03-2019

    20-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • arjithcrpf

    சிஆர்பிஎப் படையின் 80வது ஆண்டு நினைவு அணிவகுப்பு நிகழ்ச்சியில் அஜித் தோவல் பங்கேற்பு

  • catyoga

    பூனைகளுடன் சேர்ந்து யோகாசனம் செய்யும் பெண்கள் : நியூயார்கில் விநோதம்

  • lebanonwar

    லெபனானில் போரில் சிதைந்த உலோகங்களை பயன்படுத்தி பல்வேறு சிற்பங்கள் வடிவமைப்பு

  • chesspune

    ஷிக்சன் மகரிஷி சிவாஜிராவ் நினைவு தினத்தை முன்னிட்டு புனேவில் சிறுவர்களுக்கு செஸ் போட்டி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்