SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இத்தாலி ஓபன் டென்னிஸ் கால் இறுதியில் கெர்பர்

2018-05-18@ 00:39:24

ரோம்: இத்தாலி ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவு கால் இறுதிப் போட்டியில் விளையாட ஏஞ்சலிக் கெர்பர் தகுதி பெற்றுள்ளார். இத்தாலியின் ரோம் நகரில் நடக்கும் இத்தொடரில் 3ம் சுற்றுப் போட்டிகள் நேற்று நடந்தன. இதில், முன்னாள் நம்பர்-1 வீராங்கனையான ஜெர்மனியின் ஏஞ்சலிக் கெர்பர், கிரீசின் மரியா சக்காரியை எதிர்த்து விளையாடினார். அபாரமாக ஆடிய கெர்பர் 6-1, 6-1 என்ற நேர் செட்களில் சக்காரியை வீழ்த்தி, கால் இறுதிக்கு முன்னேறினார். மற்றொரு போட்டியில், அனுபவ வீராங்கனையான அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ் 2-6, 6-7 என்ற நேர் செட்களில் எஸ்தோனியாவின் அனட்கோன்டாவெயிட்டிடம் அதிர்ச்சித் தோல்வி அடைந்தார்.

லாட்வியாவின் ஒஸ்டபென்கோ 2-6, 6-3, 6-4 என்ற செட்களில் இங்கிலாந்தின் கோன்டாவையும், உக்ரைனின் ஸ்விடோலினா 0-6, 6-3, 6-2 என்ற செட்களில் ரஷ்யாவின் கஸட்கினாவையும் போராடி வென்று கால் இறுதியில் நுழைந்தனர். முன்னதாக நடந்த 2ம் சுற்றுப் போட்டியில் ரஷ்யாவின் மரிய ஷரபோவா 3-6, 6-4, 6-2 என்ற செட்களில் ஸ்லோவாகியாவின் டொமினிகா சிபுல்கோவாவை வென்றார். உலகின் 3ம் நிலை வீராங்கனையான ஸ்பெயினின் முகுருசா 7-5, 2-6, 6-7 என்ற செட்களில் ஆஸ்திரேலியாவின் கவ்ரிலோவாவிடம் அதிர்ச்சித் தோல்வி அடைந்தார்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-05-2018

    23-05-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • Tuticorinturnsviolent5

    கலவர பூமியாக மாறிய தூத்துக்குடி: துப்பாக்கிச் சூட்டில் உயிரிழப்பு 5 ஆக உயர்வு

  • Anaithukkatchikootam

    திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தின் புகைப்படங்கள்

  • tributeUSgunfiredied

    அமெரிக்கா துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு உறவினர்கள், நண்பர்கள் அஞ்சலி

  • ThooothukudiSterliteProtest

    போர்க்களமானது தூத்துக்குடி..ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் கல்வீச்சு...துப்பாக்கிச்சூடு: ஒருவர் பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்