SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மகளிர் ஆசிய சாம்பியன்ஷிப் டிராபி ஹாக்கி பைனலில் இந்தியா: மலேசியாவை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றி பெற்றது

2018-05-18@ 00:38:53

டாங்கே: மகளிர் ஆசிய சாம்பியன்ஷிப் டிராபி ஹாக்கி தொடரில் மலேசியாவை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, ஹாட்ரிக் வெற்றி பெற்ற நடப்பு சாம்பியனான இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. தென் கொரியாவின் டாங்கே நகரில் நடக்கும் இத்தொடரில் நேற்று நடந்த லீக் போட்டியில் இந்தியா, மலேசியாவை எதிர்த்து விளையாடியது. ஆரம்பத்தில் இரு அணிகளுக்கும் பெனால்டி வாய்ப்புகள் நிறைய கிடைத்தன. இதில் இந்திய அணி முதலில் கணக்கை தொடங்கியது. ஆட்டத்தின் 17வது நிமிடத்தில் நமது அணியின் நட்சத்திர வீராங்கனை குர்ஜித் கவுர் கோல் அடித்தார். அதைத்தொடர்ந்து வந்தனா கட்டாரியா சிறப்பாக ஆடி 33வது நிமிடத்தில் அபாரமாக கோல் அடித்தார்.

பதிலுக்கு மலேசியாவின் நுரைனி ரஷித் 36வது நிமிடத்தில் கோல் அடித்தார். அடுத்த 4வது நிமிடத்தில் லால்ரெம்சியாமி கோல் அடிக்க இந்தியாவின் முன்னிலை அதிகரித்தது. 48வது நிமிடத்தில் மலேசியாவின் ஹனிஸ் கோல் அடித்தார். கடைசி 15 நிமிடத்தில் மலேசிய அணி வாய்ப்புகளை வீணடிக்க இந்திய அணி 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது. முதல் 2 லீக் போட்டியில் நமது அணி, 4-1 என்ற கோல் கணக்கில் ஜப்பானையும், 3-1 என்ற கோல் கணக்கில் சீனாவையும் வென்றது. நாளை நடக்கும் கடைசி லீக் ஆட்டத்தில் இந்தியா, தென் கொரியாவை சந்திக்கிறது. இறுதிப் போட்டி நாளை மறுதினம் நடக்க உள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 27-06-2019

    27-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • mo

    அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ பிரதமர் நரேந்திர மோடியுடன் சந்திப்பு

  • 4l

    ஓரின சேர்க்கை உரிமைகள் இயக்கத்திற்கான 50 வது ஆண்டு விழா கொண்டாட்டம்

  • c1

    ஈராக் போரில் துணிச்சலுடன் செயல்பட்ட வீரருக்கு அதிபர் டொனால்ட் டிரம்ப் பதக்கம் வழங்கினார்

  • b

    இடம்பெயருதலை தடுக்க அமெரிக்கா,மெக்ஸிகோ இடையிலான எல்லையில் 15,000 தேசிய பாதுகாப்பு படையினர் குவிப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்