SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மகளிர் ஐபிஎல் காட்சி போட்டி இரு அணிகள் அறிவிப்பு

2018-05-18@ 00:38:09

புதுடெல்லி: மகளிர் ஐபிஎல் டி20 காட்சிப் போட்டிக்கான இரு அணிகளை இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) அறிவித்துள்ளது. பிசிசிஐ அடுத்த கட்டமாக மகளிர் ஐபிஎல் டி20 தொடரை நடத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக, இரு மகளிர் அணிகளுக்கு இடையேயான காட்சி போட்டி, இந்த ஐபிஎல் சீசனின் குவாலிபயர்-1 போட்டி நடக்கும் மே 22ம் தேதி மும்பை வாங்கடே மைதானத்தில் நடத்தப்பட உள்ளது. இரவு7 மணிக்கு ஐபிஎல் போட்டி தொடங்க உள்ள நிலையில், மதியம் 2 மணிக்கு காட்சிப் போட்டி நடத்தப்படுகிறது.

இதற்கான இரு அணிகளின் வீராங்கனைகளை பிசிசிஐ நேற்று அறிவித்தது. ஐபிஎல் டிரையல்பிளாசர்ஸ் அணியின் கேப்டனாக ஸ்மிருதி மந்தனாவும், ஐபிஎல் சூப்பர்நோவாஸ் அணியின் கேப்டனாக ஹர்மன்பிரீத் கவுரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இரு அணியில் இந்திய வீராங்கனைகளுடன் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து அணி வீராங்கனைகளும் இடம் பெற்றுள்ளனர்.

ஐபிஎல் டிரையல்பிளாசர்ஸ்: மந்தனா (கேப்டன்), ஹீலே, பேட்டிஸ், தீப்தி, மொனே, ஜெமிமா, ஹஷெல், ஷிகா பாண்டே, தஹுஹு, கோஸ்வாமி, எக்தா பிஷ்த், பூனம் யாதவ், தயாளன் ஹேமலதா. ஐபிஎல் சூப்பர்நோவாஸ்: ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), வயாட், மிதாலி ராஜ், லான்னிங், சோபி டிவைனி, பெர்ரி, வேதா கிருஷ்ணமூர்த்தி, மெஷ்ரம், வஸ்திராகர், ஸ்காட், ராஜேஸ்வரி கெய்க்வாட், அனுஜா படேல், தனியா பாட்டியா.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-01-2019

    23-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • aalangatty_kanamalai11

    டெல்லியில் பெய்த கனமழை மற்றும் ஆலங்கட்டி மழை காரணமாக போக்குவரத்து முடக்கம்

  • northensnow

    பனிப்பொழிவால் உறைந்த வட மாநிலங்கள் : இயல்பு வாழ்க்கை பாதிப்பு

  • baloon_worstand

    ஆந்திராவின் அரக்கு பகுதியில் சர்வதேச பலூன் திருவிழா : பிரமாண்ட வண்ண பலூன்களால் பார்வையாளர்கள் பரவசம்

  • redmoon_lunar12

    சிவப்பு நிறத்தில் காட்சியளித்த நிலவு! : வானில் தோன்றிய முழு சந்திர கிரகணம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்