SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தமிழக கோரிக்கை நிராகரிப்பு...காவிரி வாரியம் அல்ல; ஆணையம் தான் : இன்று இறுதி உத்தரவு

2018-05-18@ 00:37:48

புதுடெல்லி: காவிரி நதிநீர் பங்கீடு விவகாரத்தில் காவிரி மேலாண்மை வாரியம் என்று பெயரிட வேண்டும் என்ற தமிழகம் வைத்த கோரிக்கையை  நிராகரித்த மத்திய அரசு, அதற்கு பதிலாக காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உருவாக்கப்படும் என திருத்தம் செய்து புதிய புதிய வரைவு செயல்  திட்டத்தில் தெரிவித்துள்ளது. இதையடுத்து இந்த வழக்கில் இன்று மாலை 4 மணிக்குள் இறுதி உத்தரவு பிறப்பிக்கப்படலாம் என உச்ச நீதிமன்ற  தலைமை நீதிபதி தீபக்மிஸ்ரா நேற்று தெரிவித்தார்.   

காவிரி வழக்கானது உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏஎம்.கன்வீல்கர், சந்திராசூட் ஆகியோர் அமர்வில் நேற்று மீண்டும்  விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் திருத்தம் செய்யப்பட்ட புதிய வரைவு செயல்  திட்டத்தை நீதிபதிகள் முன்னிலையில் தாக்கல் செய்து ஒரு விளக்கத்தை தெரிவித்தார்.

 அதில், நான்கு மாநிலத்தின் காவிரி நதிநீர் பங்கீடு விவகாரத்தை தீர்க்கும் விதமாக “காவிரி நீர் மேலாண்மை ஆணையம்” என திட்டத்திற்கு  பெயரிடப்பட்டுள்ளது. இதில் அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடுதல். அதனை கட்டுக்குள் வைப்பது மற்றும் பராமரித்தல் ஆகிய அனைத்தும்  ஆணையத்தின் கட்டுக்குள் இருக்கும். இதில் எந்த ஒரு முடிவாக இருந்தாலும் மாநிலங்கள் ஆணையத்திடம் தான் முறையிட வேண்டும். மத்திய  அரசிடம் அதுகுறித்து தெரிவிக்கவோ அல்லது மேல்முறையிடு செய்ய வேண்டிய அவசியமோ கிடையாது. அதேபோல் இந்த ஆணையத்தின் தலைமை  அலுவலகம் டெல்லியிலேயே அமைக்கப்படும்” என்று கூறப்பட்டிருந்தது.

 இதற்கு தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சேகர் நாப்தே ஆட்சேபனை தெரிவித்து வாதிடும்போது, “ கோதாவரி, பிரம்மபுத்திரா  ஆகிய நதிகளுக்கு என அமைக்கப்பட்டுள்ள குழுவிற்கு வாரியம் என தான் பெயர் வைக்கப்பட்டுள்ளது. அதனால் காவிரி மேலாண்மை வாரியம் என்று  தான் இதற்கு பெயர் இருக்க வேண்டும். தமிழகத்தின் கோரிக்கை இந்த விவகாரத்தில் நிராகரிக்கப்பட்டுள்ளது. அதேப்போல் காவிரி விவகாரத்தில் கடந்த  பிப்ரவரி மாதம் 16ம் தேதி உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பிற்கு இணையாக புதிய வரைவு உள்ளதா என நீதிமன்றம் தெரிவிக்க வேண்டும். மேலும்,  எந்தெந்த மாநிலத்திற்கு எவ்வளவு தண்ணீர் வழங்க வேண்டும் என்பதை ஆணையத்திடம் தெரிவிக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும்.

அப்படி இல்லையென்றால் தற்போது இருப்பது போல் நீர் பங்கீடு பிரச்னையானது தொடர்ந்து நீடிக்கும். அதனால் முழு அதிகாரம் ஆணையத்திற்கு தான்  வழங்க வேண்டும் என்றார். இதற்கு பதிலளித்த மத்திய அரசின் தலைமை வக்கீல், “வாரியம் என்பதை விட ஆணையம் தான் மிகவும் சக்தி வாய்ந்த  ஒன்று. அதனால் இந்த விவகாரத்தில் ஆணையத்திற்கு தான் முழு அதிகாரம் உண்டு’’ என தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட கர்நாடக வக்கீல்  ஷிவாம் திவான், “வறட்சி காலங்களில் மாநிலங்களில் திறக்கப்படும் தண்ணீரை தவிர மற்ற நேரங்களில் பயன்படுத்தும் நீர் குறித்து ஆணையத்திடம்  தெரிவிக்க வேண்டும் என வரைவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனை நாங்கள் ஏன் ஆணையத்திடம் தெரிவிக்க வேண்டும். மேலும் அதற்கான முன் அறிவிப்பை கூட தெரிவிக்க வேண்டிய அவசியம் கிடையாது.  அதனால் ஆணையத்திடம் மற்றக்காலங்களில் நீர் திறப்பது குறித்து கண்டிப்பாக ஆணையத்திடம் கூற முடியாது. மேலும் உச்ச நீதிமன்ற தீர்ப்பின் படி  மத்திய அரசு தற்போது தாக்கல் செய்துள்ள வரைவு செயல் திட்டம் இல்லை. இது மாநில அரசின் அதிகாரத்தில் தலையிடுவதாக உள்ளது’’ என்றார்.  கர்நாடகாவின் இந்த வாதத்திற்கு புதுச்சேரி மாநில வக்கீலும் எதிர்ப்பு தெரிவித்தார். இந்த வாதங்களை கேட்ட தலைமை நீதிபதி காவிரிக்கென  உருவாக்கப்படும் ஆணையத்திடம் கண்டிப்பாக நீர் விவரங்களை தெரிவிக்க வேண்டும்.

ஏனெனில் அதற்கு தான் முழு அதிகாரம் உள்ளது என்றார்.  அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட  தலைமை நீதிபதி தீபக்மிஸ்ரா உத்தரவில்,  “காவிரி நதிநீர் பங்கீடு விவகாரத்தில் வழங்கப்படும் உத்தரவானது மாநிலங்களிடையே எந்த பிரச்னைகளையும் ஏற்படுத்தாத அளவிற்கு இருக்க  வேண்டும். அதனால் மத்திய அரசு தரப்பில் இருந்து தற்போது புதிதாக தயார் செய்து தாக்கல் செய்யப்பட்டுள்ள வரைவு செயல் திட்டத்தை நீதிமன்றம்  முழுவதுமாக பரிசீலனை செய்து இந்த வழக்கில் முடிந்தவரையில் நாளை (இன்று) மாலை 4 மணிக்குள்ளோ, அல்லது மே 22ம் தேதியோ இறுதி  உத்தரவு பிறப்பிக்கப்படும்’’ என்று உத்தரவிட்டார்.

மத்திய அரசு பல்டி

காவிரி விவகாரத்தில் மூன்று பெயர்களை குறிப்பிட்ட மத்திய அரசு நேற்று முன் தினம் நடந்த விசாரணையின் போது தலைமை நீதிபதியிடம் காவிரி  மேலாண்மை வாரியம் என்ற பெயரில் காவிரி செயல் திட்டத்தை அமைக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டால் அதனை உடனடியாக  செயல்படுத்துவோம் என உறுதியளித்தது. ஆனால் வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது திருத்தம் செய்யப்பட்ட வரைவில் காவிரி  மேலாண்மை வாரியம் அமைக்க முடியாது அதற்கு பதிலாக காவிரி நீர் மேலாண்மை ஆணையம் என்ற பெயரில் தான் திட்டம் உருவாக்க முடியும் என  தெரிவித்துள்ளது. இதில் காவிரி விவகாரத்தில் வழக்கம் போல் மத்திய அரசு மீண்டும் அந்தர் பல்டி அடித்துள்ளது. மேலும் தமிழக அரசு கோரிக்கையும்  தற்போது திட்டவட்டமாக நிராகரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • franvve_heavyrain

    பிரான்சின் தென்மேற்குப் பகுதியில் பலத்த மழை : வெள்ளப் பெருக்கில் 13 பேர் உயிரிழப்பு

  • 16-10-2018

    16-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • HurricaneLesliePortugal

    போர்ச்சுக்கலை தாக்கிய 'லெஸ்லி' புயலால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிப்பு!

  • IndiaStatueOfUnity

    இறுதிப் பணிகள் நிறைவடைந்து கம்பீரமாய் காட்சியளிக்கும் சர்தார் வல்லபாய் பட்டேலின் சிலை: புகைப்படங்கள்

  • HBDAbdulKalam87

    ஏவுகணை நாயகன், மக்களின் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் அவர்களின் 87-வது பிறந்தநாள் இன்று..!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்