SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஐசிசி பரிசீலனை இனி டாஸ் கிடையாது?

2018-05-18@ 00:37:34

மும்பை: கிரிக்கெட் தொடங்கிய காலத்தில் இருந்தே கடைபிடிக்கப்பட்டு வரும் மரபான டாஸ் போடும் நடைமுறைக்கு முடிவு கட்ட சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) ஆலோசித்து வருகிறது. கடந்த 1877ம் ஆண்டு இங்கிலாந்து-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே முதல் சர்வதேச டெஸ்ட் போட்டி அறிமுகப்படுத்தப்பட்டது. அன்றைய தினத்திலிருந்து, டாஸ் போடும் வழக்கம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. உள்ளூர் அணியின் கேப்டன், நாணயத்தை சுண்டி விட, எதிரணி வீரர் ஹெட் அல்லது டெய்ல் கேட்பார். அதில் வெற்றி பெறுபவர் பேட்டிங்கா, பீல்டிங்கா என்பதை தேர்வு செய்வார்கள்.

ஆனால், உள்ளூரில் நடக்கும் போட்டிகளில் தங்கள் அணிக்கு சாதகமாக ஆடுகளத்தை அமைத்துக் கொள்கிறார்கள். மேலும், சொந்த மண்ணில் விளையாடும் அணிக்கு நிறைய சாதகமான அம்சங்கள் இருப்பதால், பொதுவாக எதிரணிகளே திணறுகின்றன. இதனால், டாஸ் போடும் முறைக்கு முடிவு கட்டி, எதிரணியே பேட் செய்வதா, பந்து வீசுவதா என்பதை நேரடியாக தேர்ந்தெடுக்கும் முறையை கொண்டு வர ஐசிசி பரிசீலித்து வருகிறது. இதுதொடர்பாக சமீபத்தில் மும்பையில் நடந்த ஐசிசி கூட்டத்திலும் விவாதிக்கப்பட்டுள்ளது.

2019ம் ஆண்டில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் நடத்தப்பட உள்ளது. அப்போது இந்த புதிய நடைமுறை பின்பற்றப்படும் என தெரிகிறது. அதற்கு முன்பாக, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து இடையேயான ஆஷஸ் தொடரில் டாஸ் முறையை ஒழித்து கட்டுதலை சோதனை முயற்சியாக மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 18-10-2018

    18-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • thaneerrr_kaari

    தொடரும் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் : சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

  • gold_navaratchri11

    நவராத்திரி பிரம்மோற்சவ விழாவை முன்னட்டு திருப்பதியில் தங்க தேரோட்டம்

  • balore_arrrres1

    சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்த வங்காளதேசத்தை சேர்ந்த 31 பேர் அதிரடியாக கைது

  • gasa_vanvali111

    காசாவில் இஸ்ரேல் கடற்படையினர் துப்பாக்கிச்சூடு : 32 பாலஸ்தீனர்கள் பரிதாபமாக பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்