SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நடிகைக்கு கைமாற்றி கொடுக்க வழக்கறிஞருக்கு 1.69 கோடி கட்டணம் ஒப்புக்கொண்டார் அதிபர் டிரம்ப்

2018-05-18@ 00:29:44

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தேர்தல் செலவினங்கள் என்ற பெயரில் தனது வழக்கறிஞர் மைக்கேல் கோகைனுக்கு 1.69 கோடி வழங்கியதை ஒப்புக்கொண்டுள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்த 2016ம் ஆண்டு நடைபெற்றது. அப்போது டொனால்ட் டிரம்ப்புடன் உள்ள பாலியல் உறவு குறித்து வாய் திறக்காமல் இருப்பதற்காக ஆபாச நடிகை ஸ்டோர்மி டேனியல்சுக்கு டிரம்பின் வழக்கறிஞர் 1,30,000 டாலர்கள் இந்திய ரூபாயில் சுமார் 88 லட்சம்  கொடுக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இதனை அதிபரின் வழக்கறிஞர் கோகைனும் ஒப்புக்கொண்டிருந்தார். ஆனால் நடிகை ஸ்டோர்மி டேனியலுக்கு பணம் கொடுத்தது குறித்து தனக்கு தெரியாது என்றும் இதுகுறித்து தனது வழக்கறிஞரிடம் தான் கேட்கவேண்டும் என்றும் அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறி இருந்தார்.

 மைக்கேல் கோகைன் வீட்டில், அமெரிக்க புலனாய்வு துறையான எப்பிஐ கடந்த மாதம் திடீர் சோதனை நடத்தியது. இதில் நடிகை ஸ்டோர்மிக்கு பணம் கொடுத்தது தொடர்பான ஆவணங்கள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்பட்டது.
இந்நிலையில் அதிபர் டிரம்ப் உட்பட நிர்வாக ஊழியர்கள் தங்களது ஆண்டு செலவு கணக்கு அறிக்கையை அரசின் நெறிமுறைகள் அலுவலகத்தில் தாக்கல் செய்ய கடந்த செவ்வாய்கிழமை கடைசி தேதி என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனையடுத்து தனது ஆண்டு செலவினம் குறித்த விவரங்கள் அடங்கிய அறிக்கையை அரசு நெறிமுறைகள் அலுவலகத்தில் சமர்பித்தார். இதில் டிரம்பிற்கு 1.4 பில்லியன் டாலர் அளவிற்கு சொத்து உள்ளதாகவும், 452 மில்லியன் டாலர் அளவிற்கு வருமானம் வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதனை மதிப்பாய்வு செய்த அரசு நெறிமுறைகள் அலுவலகம் இதுகுறித்த விவரத்தை நேற்று முன்தினம் வெளியிட்டது. இதன்படி அதிபர் டொனால்ட் டிரம்ப் 2,50,000 டாலர்களை (1.69 கோடி) தனது வழக்கறிஞர் மைக்கேல் கோகைனுக்கு வழங்கியதாக குறிப்பிட்டுள்ளார். தேர்தல் தொடர்பான செலவினங்களுக்காக இந்த பணம் வழங்கப்பட்டதாக அதிபர் டிரம்ப் அதில் குறிப்பிட்டுள்ளார். அதாவது தேர்தல் செலவு என்ற பெயரில் வக்கீலுக்கு கொடுக்கப்பட்டு அதன் மூலம் நடிகைக்கு இந்த பணம் கைமாறியுள்ளதாக தெரியவந்துள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 22-01-2019

    22-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • annauniv

    அண்ணா பல்கலைக்கழகத்தில் சர்வதேச ஆவணப்படங்கள் விழா: கவர்னர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்பு

  • jammukashmir

    ஜம்மு-காஷ்மீர் பனிச்சரிவில் சிக்கியவர்களை கண்டுபிடிக்க தொடரும் மீட்புப்பணிகள்: 7 சடலங்கள் மீட்பு!

  • TulipflowerDay

    நெதர்லாந்தில் தேசிய துலிப் மலர் தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது

  • womesrally

    வுமென்ஸ் மார்ச் 2019: உலகின் பல்வேறு பகுதிகளில் பெண்கள் ஒன்று திரண்டு பேரணி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்