SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

குரூப்-1 தேர்வு முறைகேட்டில் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் : மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

2018-05-17@ 21:44:52

சென்னை: குரூப்-1 தேர்வு முறைகேடு குறித்து உயர்நீதிமன்றத்தின் கண்காணிப்பில் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். 2016 குரூப்-1 தேர்வில் மிகப்பெரிய மோசடி நடந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. அப்பல்லோ பயிற்சி மையத்தில் இருந்து டி.எஸ்.பி. மற்றும் ஆர்.டி.ஓ. பதிவுகளுக்கு தேர்வு எழுதியுள்ளனர்.

அப்பல்லோ பயிற்சி மையத்தில் படித்து தேர்வு எழுதிய பலர் டி.எஸ்.பி. மற்றும் ஆர்.டி.ஓ.வாக 62 பேர் தேர்ச்சி பெற்றனர். குறிப்பிட்ட பயிச்சி மையத்தில் அளித்த கேள்விகளில் 60% குரூப் 1 தேர்வில் கேட்கப்பட்டு உள்ளன. இதனால் நேர்மையாக படித்து தேர்வு எழுதிய மாணவர்கள் கனவை தகர்க்கும் வகையில் மோசடி நடந்துள்ளதாக புகார் தெரிவித்துள்ளார். தேர்வு வாரியம் தயாரித்த கேள்வித்தாள் மனிதநேயம் - அப்பல்லோ பயிற்சி மையத்துக்கு எப்படி கிடைத்தது. மோசடிக்கு உடந்தையாக இருந்தவர்களை போலீஸ் விசாரிக்காதது ஏன் என்றும் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் அப்பல்லோ பயிற்சி மையத்தில் நடந்த ரெய்டில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு உள்ளன. ஆவணங்கள், தொலைபேசி எண்கள் அடைப்படையில் நடவடிக்கை எடுக்காதது ஏன் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். அதிமுக ஆட்சியில் சத்துணவு சமையலர் வேலை முதல் தலைமை செயலக வேலை வரை ஊழல் தலைவிரித்தாடுகிறது என்று மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 16-06-2019

    16-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 15-06-2019

    15-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • china

    சீனாவில் பாலம் சரிந்ததால் 2 வாகனங்கள் தண்ணீரில் மூழ்கியது: மூழ்கியவர்களை தேடும் பணி தீவிரம்

  • oaman_thee11

    மர்ம தாக்குதல்களால் ஓமன் வளைகுடா பகுதியில் தீப்பற்றி எரியும் எண்ணெய் கப்பல்கள்

  • AftermathProtestHK

    ஹாங்காங்கில் அரங்கேறும் தொடர் போராட்டங்களால் அலங்கோலமாகும் நகரும்..: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்