SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஸ்ரீமுஷ்ணத்தில் உரிமம் இல்லாமல் ஆட்டோக்கள் ஓட்டும் டிரைவர்கள்: விபத்துக்கு வாய்ப்பு: நடவடிக்கை எடுக்கப்படுமா?

2018-05-17@ 21:26:49

ஸ்ரீமுஷ்ணம்: கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் நகரம் சிறப்பு பேருராட்சிக்கு உட்பட்டது. இங்கு கிராம மக்களின் வசதிக்காக 30க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் ஓடுகிறது. ஆனால் பெரும்பாலான ஆட்ேடா டிரைவர்களிடம் ஓட்டுனர் உரிமம் இல்லை என்பது தெரியவந்துள்ளது. இதனால் ஸ்ரீமுஷ்ணம் நகரில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. சில நாட்களுக்கு முன்பு ஒரு ஆட்டோ விபத்தில் சிக்கியது. ஆனால் ஆட்டோவை ஓட்டிய டிரைவரிடம் லைசென்சு இல்லை என்பது தெரியவந்தது.

ஸ்ரீமுஷ்ணம் நகரில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்த நேரத்தில் லைசென்சு இல்லாமல் ஆட்டோவை இயக்கும் டிரைவர்கள் வேகமாகவும், தாறுமாறாகவும் ஓட்டுவதால் விபத்துகள் ஏற்படுகிறது. பெரும்பாலும் முதியவர்கள் தான் விபத்தில் சிக்கி அவதிப்படுகிறார்கள்.இது ெதாடர்பாக பலமுறை அதிகாரிகளுக்கு பொதுமக்கள் புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே சிதம்பரம் போக்குவரத்து ஆய்வாளர் நேரடியாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனமுஷ்ணம் பொது மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-01-2019

    19-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • ChillaiKalanKashmir

    கடுமையான பனிப்பொழிவால் வெண் நிற ஆடை போர்த்தியது போல் காட்சியளிக்கும் காஷ்மீர்: கண்களை குளிர்விக்கும் புகைப்படங்கள்

  • bombblastcolombia

    கொலம்பியாவில் கார் வெடிகுண்டு வெடித்து விபத்து: 9 பேர் உயிரிழந்த பரிதாபம்!

  • chinafiredrone

    மின்கம்பிகளில் தொங்கும் குப்பைகளை அழிக்க தீயை உமிழும் ட்ரோன் சீனாவில் கண்டுபிடிப்பு!

  • horse_apain12

    விலங்குகளை சுத்தப்படுத்தும் திருவிழா : நெருப்புக்குள் குதிரைகளை செலுத்தும் ஸ்பெயின் மக்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்