SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஈரோடு மாட்டுச்சந்தையில் கறவை மாடுகள் வரத்து பாதியாக குறைவு

2018-05-17@ 19:58:02

ஈரோடு: ஈரோடு மாட்டு சந்தையில் கறவை மாடுகளின் வரத்து பாதியாக குறைந்ததால் கர்நாடக மாநில வியாபாரிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.ஈரோடு கருங்கல்பாளையம் கறவை மாட்டு சந்தை வாரந்தோறும் வியாழக்கிழமை நடைபெறுவது வழக்கமாகும். வறட்சி காரணமாக கடந்த மாதம் வரை விற்பனைக்கு வரும் மாடுகளின் வரத்து அதிக அளவில் இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த 2 வாரங்களாக பரவலாக கோடை மழை பெய்து வருவதால் வறட்சி நீங்கி பசுமை படர தொடங்கி உள்ளதால் தீவன தட்டுப்பாடு நீங்கி உள்ளது. இதனால் விற்பனைக்கு வரும் மாடுகளின் எண்ணிக்கை கடந்த 2 வாரங்களாக குறைந்து கொண்டே வருகின்றது.

இந்நிலையில் கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தல் நடைபெற்றதால் குறிப்பிட்ட அளவுக்கு மேல் பணம் கொண்டு வர முடியாத நிலை ஏற்பட்டதால் கடந்த ஒரு மாதகாலமாக அம்மாநில வியாபாரிகளின் வருகை இல்லாமல் இருந்து வந்தது. தற்போது தேர்தல் முடிவடைந்ததையடுத்து இன்று ஈரோடு மாட்டு சந்தைக்கு அதிக அளவில் கர்நாடக மாநில மாட்டு வியாபாரிகள் ஆர்வத்துடன் வந்திருந்தனர். ஆனால் மாடுகளின் வரத்து பாதியாக குறைந்திருந்ததால் ஏமாற்றமடைந்த கர்நாடக வியாபாரிகள் குறைந்த எண்ணிக்கையிலேயே மாடுகளை வாங்கிச்சென்றனர்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • polis_petrol11

    போலீசார் மீது பெட்ரோல் குண்டு வீச்சு; தூத்துக்குடியில் நீடிக்கிறது பதற்றம்

  • poepl_chennaii11

    சென்னை மக்களை வாட்டி வதைக்கும் கத்திரி வெயில் !...

  • thoothukudi_polissaa

    தூத்துக்குடியில் 2-வது நாளாக துப்பாக்கிச் சூடு : போலீஸ் வாகனங்களுக்கு தீவைப்பு

  • duchess_meganmarkel

    திருமணத்திற்கு பிறகு முதன்முறையாக டச்சஸ் ஆப் சுசக்ஸ் தோற்றத்துடன் உலா வந்த மேகன் மார்க்கல்

  • hyderabad_bustop11

    ஏசி, ஏடிஎம், காபி இயந்திரங்கள்,வைஃபை உள்ளிட்ட வசதிகளுடன் நவீன பேருந்து நிறுத்தம் :ஹைதராபாத்தில் வினோதம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்