SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சர்ச்சைகளில் சிக்கிய முன்னாள் நீதிபதி கர்ணன் புதிய கட்சி தொடங்கினார்

2018-05-17@ 19:34:06

கொல்கத்தா: பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய முன்னாள் நீதிபதி கர்ணன் புதிய கட்சியை தொடங்கினார். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் தனது கட்சி போட்டியிடும் என அறிவித்துள்ளார்.கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றியவர் கர்ணன். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்தபோது அவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இந்த உத்தரவுக்கு தானே தடை விதித்து கொண்டதால் அவருக்கு வழக்குகளை ஒதுக்க கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. உச்ச நீதிமன்றத்தின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறிய நீதிபதி கர்ணன், தான் தலித் சமூகத்தை சேர்ந்தவன் என்பதால் ஒதுக்கப்படுகிறேன் என கூறினார். இதனால் அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இதுதொடர்பாக, கடந்தாண்டு 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

தண்டனை காலம் முடிந்து வெளியே வந்துள்ள நீதிபதி கர்ணன், ‘ஊழல் எதிர்ப்பு கட்சி’ என்ற புதிய கட்சியை தொடங்கியுள்ளார். இதன் தொடக்க விழா கொல்கத்தாவில் நேற்று நடந்தது. இதுகுறித்து, முன்னாள் நீதிபதி கர்ணன் கூறியதாவது:ஊழலை வேரோடு அழிக்க வேண்டும் என்பதே கட்சியின் நோக்கம். தலித்துகள், சிறுபான்மையினர் நலனை பாதுகாக்கும் வகையில் இக்கட்சி செயல்படும். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவோம். தேர்தலில் பெண்களுக்கு அதிகளவில் வாய்ப்பு வழங்கப்படும். பிரதமர் மோடியின் சொந்த தொகுதியான வாரணாசியில் எனது கட்சியின் சார்பில் பெண் வேட்பாளர் நிறுத்தப்படுவார். ஊழல் எதிர்ப்பு கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-03-2019

    20-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • arjithcrpf

    சிஆர்பிஎப் படையின் 80வது ஆண்டு நினைவு அணிவகுப்பு நிகழ்ச்சியில் அஜித் தோவல் பங்கேற்பு

  • catyoga

    பூனைகளுடன் சேர்ந்து யோகாசனம் செய்யும் பெண்கள் : நியூயார்கில் விநோதம்

  • lebanonwar

    லெபனானில் போரில் சிதைந்த உலோகங்களை பயன்படுத்தி பல்வேறு சிற்பங்கள் வடிவமைப்பு

  • chesspune

    ஷிக்சன் மகரிஷி சிவாஜிராவ் நினைவு தினத்தை முன்னிட்டு புனேவில் சிறுவர்களுக்கு செஸ் போட்டி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்