SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு : ஜூலை 20 முதல் நாடு முழுவதும் லாரிகள் ஸ்டிரைக்

2018-05-17@ 19:16:16

டெல்லி : டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜூலை 20 முதல் நாடு முழுவதும் லாரிகள் வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் நடந்த மோட்டார் காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே சுங்கக் கட்டணம் வசூல் செய்ய கோரிக்கை விடுத்துளள்னர்.

டீசல் விலை, இன்சூரன்ஸ் கட்டண உயர்வை கண்டித்து வேலை நிறுத்தம் செய்ய திட்டமிட்டுள்ளனர். தினமும் டீசல் விலை உயர்த்தப்படுவதால் லாரி தொழில் அழிந்துவிட்டது என்று தெரிவித்தனர். மேலும் 3-ம் நபர் விபத்துகாப்பீடு கட்டணம் குறைக்க வலியுறுத்தியும் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

டீசல் விலை உயர்வு


தற்போது பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.4, டீசல் விலை லிட்டருக்கு ரூ.3 முதல் ரூ.3.50 வரை உயரும் என தகவல் வெளியாகியுள்ளது. கடந்த மாதம் 24-ம் தேதி முதல் மே 13-ம் தேதி வரை பெட்ரோல்,டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் இருந்து வந்தது. கர்நாடக தேர்தலையொட்டி பெட்ரோல்,டீசல் விலை மாற்றம் செய்யப்படாமல் இருந்ததாக கூறப்பட்டது.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • polis_petrol11

    போலீசார் மீது பெட்ரோல் குண்டு வீச்சு; தூத்துக்குடியில் நீடிக்கிறது பதற்றம்

  • poepl_chennaii11

    சென்னை மக்களை வாட்டி வதைக்கும் கத்திரி வெயில் !...

  • thoothukudi_polissaa

    தூத்துக்குடியில் 2-வது நாளாக துப்பாக்கிச் சூடு : போலீஸ் வாகனங்களுக்கு தீவைப்பு

  • duchess_meganmarkel

    திருமணத்திற்கு பிறகு முதன்முறையாக டச்சஸ் ஆப் சுசக்ஸ் தோற்றத்துடன் உலா வந்த மேகன் மார்க்கல்

  • hyderabad_bustop11

    ஏசி, ஏடிஎம், காபி இயந்திரங்கள்,வைஃபை உள்ளிட்ட வசதிகளுடன் நவீன பேருந்து நிறுத்தம் :ஹைதராபாத்தில் வினோதம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்