SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

ஜம்மு காஷ்மீரில் உள்ள அமர்நாத் கோயில் செல்ல 1.70 லட்சம் பேர் முன்பதிவு

2018-05-17@ 19:12:32

ஸ்ரீநகர்,: காஷ்மீரில் உள்ள, அமர்நாத் குகை கோவிலுக்கு செல்ல, இதுவரை, 1.70 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர்.ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் மக்கள் ஜனநாயக கட்சி - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. மக்கள் ஜனநாயக கட்சியை சேர்ந்த மெகபூபா முதல்வராக இருக்கிறார். இந்த மாநிலத்தில் அமைந்துள்ள, அமர்நாத் குகை கோவிலில், பனி லிங்க தரிசனம் செய்ய, ஆண்டுதோறும், லட்சக் கணக்கான பக்தர்கள், புனிதப் பயணம் மேற்கொள்வது வழக்கம். இந்த பயணத்தில் பங்கேற்க விரும்புவோர், முன்பதிவு செய்வது அவசியம். இந்த ஆண்டுக்கான, அமர்நாத் புனித யாத்திரை, அடுத்த மாதம், 28ல் துவங்கி, 60 நாட்கள் நடக்க உள்ளது.

இதற்கான முன்பதிவு கடந்த மார்ச், 1ல் துவங்கியது. நாட்டின் பல பகுதிகளில் செயல்படும், பஞ்சாப் நேஷனல் வங்கி, ஜம்மு - காஷ்மீர் வங்கி மற்றும் எஸ் வங்கிகளின், 440 கிளைகளில், இதற்கான முன்பதிவு செய்யப்படுகிறது. இதுவரை, 1.39 லட்சம் பேர், தரை வழியாகவும், 28 ஆயிரத்து, 516 பேர், ஹெலிகாப்டர் மூலமும் யாத்திரை செல்ல முன்பதிவு செய்துள்ளனர். 2,122 வெளிநாட்டினரும், அமர்நாத் யாத்திரையில் பங்கேற்ற முன் பதிவு செய்துள்ளனர். 13 வயதுக்கு உட்பட்ட மற்றும் 75 வயதுக்கு மேற்பட்டோர், இந்த யாத்திரையில் பங்கேற்க அனுமதி கிடையாது.முழு உடல் நல பரிசோதனைக்குப் பின்பே, யாத்திரையில் பங்கேற்க அனுமதிக்கப்படுகின்றனர். யாத்திரையில் பங்கேற்க விரும்புவோர், உடனடியாக பதிவு செய்யும் வகையில், ‘ஆன் ஸ்பாட் ரெஜிஸ்ட்ரேசன்’ மையங்களும் செயல்படுத்தப்ட்டு வருகிறது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 22-09-2018

    22-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • muharamfest

    நாடு முழுவதும் இஸ்லாமியர்களின் மொஹரம் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது

  • nasaevanaktrump

    அமெரிக்காவில் உள்ள நாசாவின் ஜான்சன் விண்வெளி ஆய்வு மையத்தை பார்வையிட்ட இவாங்கா டிரம்ப்

  • florence&trumph

    பிளோரென்ஸ் புயலால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய அமெரிக்க அதிபர் டிரம்ப்

  • greenlandicemelt

    கிரீன்லாந்தில் வெப்பமயமாதலால் உருகும் பனிப்பாறைகள் : கடல் நீர்மட்டம் உயரும் அபாயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்