SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கர்நாடக எம்.எல்.ஏ.க்கள் தங்கியிருந்த ஈகிள்டன் சொகுசு விடுதிக்கு போலீஸ் பாதுகாப்பு வாபஸ்

2018-05-17@ 18:06:20

கர்நாடகா: பிடதி ஈகிள்டன் சொகுசு விடுதிக்கு போலீஸ் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளது. ஈகிள்டன் சொகுசு விடுதியில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். எனவே போலீஸ் பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டதால் எம்.எல்.ஏ.க்களுக்கு கட்சியினரே பாதுகாப்பு அளிப்பதாக கூறுகின்றனர். மேலும் எம்.எல்.ஏ.க்களை தற்போது பஞ்சாப் அல்லது கேரளாவிற்கு இடமாற்றம் செய்ய காங். திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

காங்கிரஸ், மஜத உறுப்பினர்களை பா.ஜக. ரூ. 100 கோடி மற்றும் அமைச்சர் பதவி ஆசைக்காட்டி இழுக்க பார்க்கிறது என குமாரசாமி குற்றம்சாட்டினார். பாஜகவுக்கு காங்கிரஸ் உறுப்பினர்கள் தாவுவதை தடுக்க அந்த கட்சியின் மூத்த தலைவர்கள் பெங்களூருவில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் கூடி நேற்று ஆலோசனை நடத்தினர். இதைத் தொடர்ந்து புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் எம்எல்ஏக்கள் நேற்று கட்சி அலுவலகத்தில் இருந்து மைசூரு சாலையில் உள்ள ஈகிள்டன் சொகுசு விடுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இதேபோல பெங்களூரு வசந்த் நகரில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் மஜத எம்எல்ஏக்கள் தங்க வைக்கப்பட்டனர். தற்போது சொகுசு விடுதிக்கு போலீஸ் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டதால் எம்.எல்.ஏ.க்களை கேரளாவிற்கு இடமாற்றம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்

கர்நாடகவில் 23-வது முதலமைச்சராக எடியூரப்பா பதவியேற்ற முதல் நாளிலேயே 4 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ஊழல் பிரிவு ஏ.டி.ஜி.பி.யாக அமர்குமாரும், உளவுப் பிரிவுக்காக சந்திப்பாட்டீலும், பெங்களூரு நகர மத்திய மண்டல துணை ஆணையராக தேவராஜாவும், பெங்களூரு நகர வடகிழக்கு மண்டல துணை ஆணையராக கிரிஷ் ஐ.பி.எஸ். ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-03-2019

    20-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • arjithcrpf

    சிஆர்பிஎப் படையின் 80வது ஆண்டு நினைவு அணிவகுப்பு நிகழ்ச்சியில் அஜித் தோவல் பங்கேற்பு

  • catyoga

    பூனைகளுடன் சேர்ந்து யோகாசனம் செய்யும் பெண்கள் : நியூயார்கில் விநோதம்

  • lebanonwar

    லெபனானில் போரில் சிதைந்த உலோகங்களை பயன்படுத்தி பல்வேறு சிற்பங்கள் வடிவமைப்பு

  • chesspune

    ஷிக்சன் மகரிஷி சிவாஜிராவ் நினைவு தினத்தை முன்னிட்டு புனேவில் சிறுவர்களுக்கு செஸ் போட்டி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்