SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வேலூரில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை : பொதுமக்கள் புகார்

2018-05-17@ 17:45:49

வேலூர்: தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை வெளிப்படையாக நடைபெற்று வருவதாக வேலூர் மாவட்டம் மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.  ஆற்காடு, வாலாஜா, ராணிப்பேட்டை, ஆம்பூர், வணியம்பாடி ஆகிய பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மக்கள் கூடும் இடங்களைக் குறிவைக்கும் மோசடி கும்பல், தமிழக அரசால் தடைசெய்யபட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்வதாக கூறப்படுகிறது. தொழிலாளர்கள், விவசாயிகள், கூலித் தொழிலாளர்கள் உட்பட பல்வேறு தரப்பு மக்களும் பாதிக்கப்படுகின்றனர். உழைத்த பணத்தில் லாட்டரி சீட்டுகளை வாங்கி பரிசு கிடைக்காமல் ஏமாற்றத்துடன் வீடு திரும்புகின்றனர். இதனால் இந்தப் பகுதியில் பல குடும்பங்கள் நொடிந்து போயுள்ளதாக மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

ராணிப்பேட்டை பகுதியில் உள்ள வீடு ஒன்றில் சட்டவிரோதமாக டோக்கன் லாட்டரி விற்பனை செய்யப்படுவதாக மக்கள் சாடியுள்ளனர். கர்நாடக மற்றும் கேரள மாநிலத்தை சேர்ந்த லாட்டரிகள் மற்றும் ஒரு நம்பர் லாட்டரி ஆகியவை பொதுமக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் விற்கப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தியுள்ளனர். இது தொடர்பாக அதிகாரிகளி்டம் புகார் அளித்தும் இதுவரை உரிய நடவடிக்கைகள் ஏதும் எடுக்கப்படவில்லை என குற்றம்சாட்டப்பட்டுள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-03-2019

    20-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • arjithcrpf

    சிஆர்பிஎப் படையின் 80வது ஆண்டு நினைவு அணிவகுப்பு நிகழ்ச்சியில் அஜித் தோவல் பங்கேற்பு

  • catyoga

    பூனைகளுடன் சேர்ந்து யோகாசனம் செய்யும் பெண்கள் : நியூயார்கில் விநோதம்

  • lebanonwar

    லெபனானில் போரில் சிதைந்த உலோகங்களை பயன்படுத்தி பல்வேறு சிற்பங்கள் வடிவமைப்பு

  • chesspune

    ஷிக்சன் மகரிஷி சிவாஜிராவ் நினைவு தினத்தை முன்னிட்டு புனேவில் சிறுவர்களுக்கு செஸ் போட்டி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்