SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பழனி முருகன் கோயில் சிலை முறைகேடு வழக்கு : முன்னாள் ஆணையர் தனபாலை கைது செய்ய இடைக்காலத் தடை

2018-05-17@ 17:40:41

மதுரை : பழனி முருகன் கோயில் சிலை முறைகேடு வழக்கில் முன்னாள் ஆணையர் தனபாலை ஒரு வாரத்திற்கு கைது செய்ய இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.இந்து சமய அறநிலையத்துறை முன்னாள் ஆணையர் தனபால் முன்ஜாமீன் கோரிய வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. முன்னதாக பழனி முருகன் கோவிலில் கடந்த 2004ம் ஆண்டு புதிதாக உற்சவர் சிலை செய்யப்பட்டதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக புகார் எழுந்தன.

இதுகுறித்து  14 ஆண்டுகளுக்குப் பின்னர், ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் தலைமையிலான சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவினர் நடத்திய விசாரணையில் பல்வேறு உண்மைகள் வெளிவந்தன. இதில் 2004ஆம் ஆண்டு 200 கிலோ எடையில் உற்சவர் சிலையைத் தயாரிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டு, அந்தப் பொறுப்பு ஸ்பதி முத்தையாவிடம் ஒப்படைக்கப்பட்டது தெரிய வந்தது.

ஆனால், ஒப்புதல் அளிக்கப்பட்டதை விட 21 கிலோ கூடுதலாகச் சேர்த்து, 221 கிலோ எடையில் சிலை செய்யப்பட்டிருப்பதும், சிலையில் அதிக அளவு செம்பு சேர்க்கப்பட்டிருப்பதும் விசாரணையில் அம்பலமானது. இந்தச் சிலையில் வெள்ளி உலோகம் சேர்க்கப்படவே இல்லை என்பதும் கண்டறியப்பட்டது.  இந்த வழக்கில் தலைமை ஸ்தபதி முத்தையா, இணை ஆணையர் கே.கே.ராஜா ஆகியோர் ஏற்கனவே கைதாகி ஜாமீனில் வெளிவந்துள்ளனர். திருத்தணி கோயிலின் ஓய்வு பெற்ற இணை ஆணையர் புகழேந்தியும் தங்க நகை மதிப்பீட்டாளர் தேவேந்திரனும் அண்மையில் கைது செய்யப்பட்டனர். 2 போரையும் கைது செய்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி பொன்மாணிக்கவேல் நடவடிக்கை எடுத்துள்ளார்.

இந்து சமய அறநிலையத்துறை ஆணையராக இருந்த தனபாலுக்கு 2 முறை சம்மன் அனுப்பப்பட்டும் அவர் ஆஜராகாததால் அவர் தலைமறைவாகி விட்டதாக கருதி சிலைத் தடுப்பு போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் தனபாலின் முன் ஜாமீன் மனு இன்று விசாரணைக்கு வந்தபோது அது தொடர்பாக பதிலளிக்க அரசுத் தரப்பில் கால அவகாசம் கோரப்பட்டது. இதனையடுத்து வழக்கு விசாரணையை ஒரு வாரத்திற்கு ஒத்திவைத்த நீதிபதி, அதுவரை தனபாலை கைது செய்ய தடைவிதித்தார். 


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • GurugramBuildingCollapse

    ஹரியானாவில் புதிதாக கட்டப்பட்டு வந்த 4 மாடி கட்டிடம் இடிந்து விபத்து: மீட்பு பணிகள் தீவிரம்!

  • Netajimodi

    நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அருங்காட்சியகம் : பிரதமர் மோடி திறந்து வைத்தார்

  • VenezuelaProtestMaduro

    அதிபர் மதுரோ பதவி விலகக்கோரி வெனிசுலாவில் வலுப்பெற்றுள்ள போராட்டம்: வன்முறையில் இதுவரை 13 பேர் பலி

  • ChinaAIRestaurant

    முழுக்க முழுக்க ரோபோக்களால் செயல்படும் உணவகம்..: சீன தலைநகர் பெய்ஜிங்கில் திறப்பு

  • GreenLandIceLoss

    கிரீன்லாந்தில் நான்கு மடங்கு அதிகமாக உருகி வரும் பனிப்பாளங்கள்..: விஞ்ஞானிகள் கவலை!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்