SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.4; டீசல் விலை லிட்டருக்கு ரூ.3 உயரும் எனத் தகவல்

2018-05-17@ 17:32:06

டெல்லி : பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.4, டீசல் விலை லிட்டருக்கு ரூ.3 முதல் ரூ.3.50 வரை உயரும் என தகவல் வெளியாகியுள்ளது. கடந்த மாதம் 24-ம் தேதி முதல் மே 13-ம் தேதி வரை பெட்ரோல்,டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் இருந்து வந்தது. கர்நாடக தேர்தலையொட்டி பெட்ரோல்,டீசல் விலை மாற்றம் செய்யப்படாமல் இருந்ததாக கூறப்பட்டது.

இதை உறுதி செய்யும்வகையில் கர்நாடக தேர்தலுக்கு பின்னர், பெட்ரோல்,டீசல் விலையில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. சில தினங்களாக சில பைசாக்கள் மட்டுமே உயர்த்தப்பட்ட நிலையில் தற்போது மொத்தமாக 4 ரூபாய் உயர்த்த உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்துக்கொண்டே இருக்கிறது. ஈரான் மீது ஏற்பட்டிருக்கும் அழுத்தம் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயர்ந்து இருக்கிறது. மேலும் டாலருக்கு எதிராக இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்து கொண்டே வருகிறது. இந்த இரண்டு காரணங்களாலும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து இருக்கிறது. அது மட்டுமல்லாமல் சில அரசியல் காரணங்களாலும் விலை உயர்த்தப்படுகிறது குறிப்பிடத்தக்கது.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • polis_petrol11

    போலீசார் மீது பெட்ரோல் குண்டு வீச்சு; தூத்துக்குடியில் நீடிக்கிறது பதற்றம்

  • poepl_chennaii11

    சென்னை மக்களை வாட்டி வதைக்கும் கத்திரி வெயில் !...

  • thoothukudi_polissaa

    தூத்துக்குடியில் 2-வது நாளாக துப்பாக்கிச் சூடு : போலீஸ் வாகனங்களுக்கு தீவைப்பு

  • duchess_meganmarkel

    திருமணத்திற்கு பிறகு முதன்முறையாக டச்சஸ் ஆப் சுசக்ஸ் தோற்றத்துடன் உலா வந்த மேகன் மார்க்கல்

  • hyderabad_bustop11

    ஏசி, ஏடிஎம், காபி இயந்திரங்கள்,வைஃபை உள்ளிட்ட வசதிகளுடன் நவீன பேருந்து நிறுத்தம் :ஹைதராபாத்தில் வினோதம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்