SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மக்களுக்கு எதிராக எது வந்தாலும் எதிர்ப்பேன், நிச்சயம் நாளை நமது என்று நம்புங்கள் : கமல்ஹாசன் பேச்சு

2018-05-17@ 17:15:06

திருச்செந்தூர் : மக்களுக்கு எதிராக எது வந்தாலும் எதிர்ப்பேன், நிச்சயம் நாளை நமது என்று நம்புங்கள் என்று திருச்செந்தூரில் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். நெல்லை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட மக்கள் நீதி மய்ய கட்சித் தலைவர் நடிகர் கமலஹாசன், நெல்லையில் பல்வேறு பகுதிகளில் உரையாற்றினார்.  கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நடிகர் கமல், இன்று காலை நெல்லை மாவட்டத்தில் உள்ள பணகுடி என்ற கிராமத்தில் மக்களைச் சந்தித்து பேசினார்.

அப்போது அவர் மக்கள் நீதி மய்யம் முக்கிய பாதையில் செல்கிறது என்றார். இனி அடிக்கடி உங்களை தேடி வரும் இந்த பயணம் நிகழும் மக்களை தரிசிப்பதற்காகவே இந்த பயணம் என்றார். மேலும் நீங்கள் 50 வருடங்களாக என்னைப் பார்த்து வருகிறீர்கள். இப்போது உங்களைப் பார்க்க நான் வந்துள்ளேன் என்றார். பின்பு திருச்செந்தூரில் பொதுமக்ளிடையே பேசிய அவர், மக்களுக்கு எதிராக எது வந்தாலும் எதிர்ப்பேன், நிச்சயம் நாளை நமது என்று நம்புங்கள் என்று தெரிவித்தார்.இதனிடையே நான் நேசிப்பது மக்களைத்தான்; எனது எஞ்சிய வாழ்வு உங்களுக்காக மட்டும்தான் என்றும் மக்கள் நீதிமய்யத்தின் நகர்வு ஒவ்வொரு நாளும் வலுத்துக் கொண்டு இருக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 27-06-2019

    27-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • mo

    அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ பிரதமர் நரேந்திர மோடியுடன் சந்திப்பு

  • 4l

    ஓரின சேர்க்கை உரிமைகள் இயக்கத்திற்கான 50 வது ஆண்டு விழா கொண்டாட்டம்

  • c1

    ஈராக் போரில் துணிச்சலுடன் செயல்பட்ட வீரருக்கு அதிபர் டொனால்ட் டிரம்ப் பதக்கம் வழங்கினார்

  • b

    இடம்பெயருதலை தடுக்க அமெரிக்கா,மெக்ஸிகோ இடையிலான எல்லையில் 15,000 தேசிய பாதுகாப்பு படையினர் குவிப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்