SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

புலிவாலை பிடித்ததா பாஜக ? கர்நாடகா, கோவாவை தொடர்ந்து பீகாரில் ஆளுநரை சந்திக்க லாலு கட்சி முடிவு

2018-05-17@ 16:56:06

பாட்னா : கோவாவில் காங்கிரஸ் கட்சியைத் தொடர்ந்து பீகாரில் லாலுவின் கட்சி போர்க்கொடி தூக்கியது.ராஷ்ட்ரீய ஜனதா தளமே தனிப்பெரும் கட்சி என்றும் எங்களுக்கே ஆட்சியமைக்க உரிமை உண்டு என்றும் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ் கோரிக்கை விடுத்துள்ளார்.

கர்நாடகா தேர்தலும் குழப்பங்களும்


கர்நாடகாவில் சட்டப்பேரவை தேர்தல் மே 12ம் தேதி நடைபெற்றது. கர்நாடகாவில் 222 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் நேற்று முன்தினம் வெளியாகியது. அதன்படி பாரதிய ஜனதா கட்சி-104 தொகுதிகளிலும், காங்கிரஸ்-78 தொகுதிகளிலும், மதசார்மற்ற ஜனதா கட்சி 38 தொகுதிகளிலும், மற்ற கட்சியினர் 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றனர்.இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் மற்றும் மதசார்மற்ற ஜனதா தளமும் கூட்டணியோடு ஆட்சி அமைப்பதற்காக ஆளுநரை சந்திக்க முற்பட்டார்கள். இருந்தபோதிலும் அங்கு தனிப்பெரும் கட்சியாக இருந்த பாஜகவையே ஆளுநர் அழைத்தார். அதன்படி இன்று காலை எடியூரப்பா முதலமைச்சராக பதவியேற்று கொண்டார்.  

கோவாவில் காங்கிரஸ் போர்க்கொடி

இந்நிலையில் கோவாவில் தனிப்பெரும் கட்சியாக உள்ளதால், ஆட்சி அமைக்க அனுமதி கோரி காங். எம்.எல்.ஏக்கள் 16 பேர், நாளை ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முடிவு செய்திருந்தனர். தனிப்பெரும் கட்சி என்பதால் கோவாவில் ஆட்சி அமைக்க தங்களுக்குத்தான் அதிகாரம் உண்டு என்ற கருத்தோடு அவர்கள் போர்க்கொடி தூக்கியிருந்தனர்.  

பீகாரில் ராஷ்டிரிய ஜனதா தளம் போர்க்கொடி


இதேபோல பீகாரில் தனிப்பெரும் கட்சியாக உள்ளதால், ஆட்சி அமைக்க உரிமை கோர ராஷ்டிரிய ஜனதா தளம் முடிவு செய்துள்ளது. 80 எம்.எல்.ஏக்களை ஆளுநர் மாளிகைக்கு அழைத்துசெல்ல உள்ளதாக, அந்த கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ் ட்விட்டரில் அறிவித்துள்ளார். பீகாரில் ஆட்சியை கலைக்க வேண்டும் என்று ஆளுநருக்கு ராஷ்ட்ரீய ஜனதா தளம் கோரிக்கை விடுத்துள்ளது.

பீகாரில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் - 80 இடங்களையும், ஐக்கிய ஜனதா தளம் 70 இடங்களையும், பாஜக 50 இடங்களையும் பிடித்திருந்தன.இதனைத்தொடர்ந்து பீகாரில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து ஐக்கிய ஜனதா தளம் ஆட்சியமைத்தது. கர்நாடகாவில் தனிப்பெரும் கட்சியான பாஜகவை ஆளுநர் ஆட்சி அமைக்க அழைத்ததை தொடர்ந்து கோவாவில் காங்கிரசும், பீகாரில் ராஷ்ட்ரீய ஜனதா தளமும் இந்த முடிவு எடுத்துள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-03-2019

    20-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • arjithcrpf

    சிஆர்பிஎப் படையின் 80வது ஆண்டு நினைவு அணிவகுப்பு நிகழ்ச்சியில் அஜித் தோவல் பங்கேற்பு

  • catyoga

    பூனைகளுடன் சேர்ந்து யோகாசனம் செய்யும் பெண்கள் : நியூயார்கில் விநோதம்

  • lebanonwar

    லெபனானில் போரில் சிதைந்த உலோகங்களை பயன்படுத்தி பல்வேறு சிற்பங்கள் வடிவமைப்பு

  • chesspune

    ஷிக்சன் மகரிஷி சிவாஜிராவ் நினைவு தினத்தை முன்னிட்டு புனேவில் சிறுவர்களுக்கு செஸ் போட்டி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்