SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

விவசாயிகளுக்கான கட்சி பாஜக தான்; காவிரி நீரும் தமிழகத்திற்கு வரும் : தமிழிசை சௌந்தரராஜன்

2018-05-17@ 16:44:21

சென்னை : காவிரி விவகாரத்தில் திருத்தப்பட்ட வரைவு திட்டம் மீதான வழக்கில் நாளை மாலை 4 மணிக்கு தீர்ப்பு அளிக்கப்படும் என்று அறிவித்துள்ளது. மேலும் நாளை தீர்ப்பு வழங்காவிடில் மே 22 அல்லது 23 ஆம் தேதிகளில் தீர்ப்பளிக்கப்படும் என்றும் கூறியுள்ளது. இது தொடர்பாக தமிழக பாஜக  மாநிலத்தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியதாவது; தமிழகத்திற்கான காவிரி நீர் உரிமை விரைவில் கிடைக்க இருக்கிறது என்று தெரிவித்தார்.

தமிழகத்தின் கோரிக்கையை ஏற்று காவிரி ஆணையத்தின் தலைமையகம் டெல்லிக்கு மாற்றியிருப்பது வரவேற்கத்தக்கது என்று கூறினார். பெயரில் ஒன்றும் இல்லை; நீரில் தான் பிரச்சனை இருக்கிறது. விவசாயிகளுக்கான கட்சி பாஜக தான் என்று தெரிவித்த அவர், கர்நாடகாவில் முதல்வராக பதவி ஏற்ற எடியூரப்பா 56 ஆயிரம் கோடிக்கு விவசாய கடனை தள்ளுபடி செய்துள்ளார். ஆகையால் காவிரி நீரும் தமிழகத்திற்கு வரும், அது விவசாயிகளுக்கானது, அதனால் விவசாயிகளுக்கான கட்சி பாஜக தான் என நாங்கள் நிரூபித்திருக்கிறோம் என்று தெரிவித்தார். 


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-03-2019

    20-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • arjithcrpf

    சிஆர்பிஎப் படையின் 80வது ஆண்டு நினைவு அணிவகுப்பு நிகழ்ச்சியில் அஜித் தோவல் பங்கேற்பு

  • catyoga

    பூனைகளுடன் சேர்ந்து யோகாசனம் செய்யும் பெண்கள் : நியூயார்கில் விநோதம்

  • lebanonwar

    லெபனானில் போரில் சிதைந்த உலோகங்களை பயன்படுத்தி பல்வேறு சிற்பங்கள் வடிவமைப்பு

  • chesspune

    ஷிக்சன் மகரிஷி சிவாஜிராவ் நினைவு தினத்தை முன்னிட்டு புனேவில் சிறுவர்களுக்கு செஸ் போட்டி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்