SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் டாஸ் போடும் முறையை கைவிட ஐசிசி பரிசீலனை

2018-05-17@ 16:00:53

அபுதாபி : டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் பாரம்பரியமான டாஸ் போடும் முறையை கைவிட சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் பரிசீலித்து வருகிறது. கிரிக்கெட் போட்டிகள் முதன்முதலில் தொடங்கப்பட்ட போதே, டாஸ் போடும் முறை இருந்து வருகிறது. அதாவது முதல் டெஸ்ட் போட்டி,1877ம் ஆண்டு இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே  நடந்தது. இந்த போட்டியிலேயே டாஸ் போடப்பட்டது. உள்நாட்டு அணியின் கேப்டன் டாஸ் போடுவார்.

வெளிநாட்டில் வந்திருக்கும் கேப்டன் பூவா, தலையா என்று கேட்பார் அப்போது ஆரம்பிக்கப்பட்ட இந்த சம்பிரதாயம் இன்று வரை தொடர்ந்து வருகிறது.இந்நிலையில் டெஸ்ட் போட்டி நடத்தும் நாடுகள் தங்களுக்கு சாதகமாகவே பிட்ச் -ஐ தயார் செய்து விளையாடுவார்கள். இதனால் எதிரணிகளுக்கு சிக்கல் ஏற்படுகிறது. இதுபற்றி யாரும் வாய்திறக்காமல் இருந்தாலும் சமீபகாலமாக இப்படி ஒரு தலைப்பட்சமாக பிட்ஸை அமைத்து கொள்வதற்கு எதிர்ப்புகள் கிளம்பின.

இதனையடுத்து டாஸ் போடும் முறையை டெஸ்ட் போட்டியில் இருந்து நீக்க சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் முடிவு செய்து வருகிறது. அதன்படி 2019ம் ஆண்டு நடக்கும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் புதிய நடைமுறையை செயல்படுத்த இருக்கிறது. வெளிநாட்டில் இருந்து விளையாட வந்திருக்கும் அணியின் கேப்டன் பந்துவீசுவதா ? பேட்டிங் செய்வதா ? என்பதை முடிவு செய்வார் என்று கூறப்படுகிறது. இது பற்றி ஐசிசி கூட்டத்தில் பேசி முடிவு எடுக்கப்பட்ட இருக்கிறது. இதற்கான கூட்டம் இந்த மாத இறுதியில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • modi_bahvan_bang

    வங்காளதேசம் பவன் ஆய்வகத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!

  • proteststerliteissue

    சென்னையில் தமிழ்நாடு கலை இலக்கிய ஊடக செயற்பாட்டார்கள் கூட்டமைப்பு போராட்டம்

  • LibyaCarbombAttack

    லிபியாவின் பெங்காஸி நகரில் கார் குண்டு தாக்குதல்: 7 பேர் பரிதாபமாக உயிரிழப்பு

  • Libyacarbomb7

    லிபியாவில் நடத்தப்பட்ட கார் குண்டு தாக்குதலில் 7 பேர் உயிரிழப்பு

  • 26-05-2018

    26-05-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்