SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கர்நாடகாவில் அரசியல் சாசனம் மீதான தாக்குதல் தொடங்கிவிட்டது : நடிகர் பிரகாஷ் ராஜ்

2018-05-17@ 15:54:00

சென்னை : நடிகர் பிரகாஷ்ராஜ் கர்நாடகத்தில் பாஜக.வை  எதிர்த்து பிரசாரம் செய்ததுடன் பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்தார். இந்நிலையில் கர்நாடகாவில் அரசியல் சாசனம் மீதான தாக்குதல் தொடங்கி உள்ளதாக நடிகர் பிரகாஷ் ராஜ் விமர்சனம் செய்துள்ளார்.

நடிகர் பிரகாஷ் ராஜ் இன்று வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில் கூறியிருப்பதாவது:- கர்நாடகாவில் நடக்கும் அடுத்தடுத்து அரசியல் திருப்பங்களை அரசியல் சாசனம் மீதான தாக்குதல் தொடங்கிவிட்டதாக கூறியிருக்கும் பிரகாஷ் ராஜ், எம்.எல்.ஏக்கள் எங்கு தாவினார்கள், எம்.எல்.ஏக்கள் எங்கு தங்கவைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பன போன்ற செய்திகள் வெளிவர தொடங்கியுள்ளதாகவும், அரசியல் சாணக்கியங்களை கண்டுகளியுங்கள் எனவும் கூறியுள்ளார்.

அரசியல்வாதிகளின் விளையாட்டில் நமது இறுதி தீர்ப்பு அரசியலுக்காக எப்படியெல்லாம் மாற்றப்படுகிறது, நமது நம்பிக்கையை சீர்குலைப்பவர்கள் யார் என்பன போன்றவற்றையெல்லாம் இப்போது கூட நாம் உணரவில்லையெனில் மீண்டும் தோற்றுப்போவோம் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 15-08-2018

    15-08-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • chinaearthquake

    சீனாவின் யுன்னான் மாகாணத்தில் நிலநடுக்கம்: 18 பேர் காயம்

  • meteorshower

    ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் விண்கல் மழை: வானில் நிகழ்ந்த அதிசயம்

  • indonesiaafterquake

    இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் பாதிப்பு: மக்களின் வாழ்வாதாரம் முடக்கம்

  • sijaapanda

    சீனாவில் சிஜ்ஜா பாண்டா கரடியின் 12-வது பிறந்தநாள் கொண்டாட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்