SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கர்நாடகாவில் ஆட்டத்தை ஆரம்பித்த பாரதிய ஜனதா : 2 காங்., MLA-க்கள் அபேஸ்... ராஜினாமா செய்ய வைக்க திட்டம்..!

2018-05-17@ 15:53:15

பெங்களூரு: கர்நாடக அரசியல் களம் நிமிடத்திற்கு நிமிடம் விறுவிறுப்பாகி வருகிறது. பெரும்பான்மை இல்லாத நிலையிலும் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துள்ள பாரதிய ஜனதா தனது ஆட்டத்தை துவக்கி விட்டது. மத்திய அரசின் செல்வாக்கு, ஆளுநரின் ஆதரவு என சகல திசைகளிலும் இருந்து எடியூரப்பாவிற்கு ஆட்சிக் கட்டிலை பெற்றுத் தந்துள்ளது. பல்வேறு சர்ச்சைகளுக்கிடையே ஆட்சிக் கட்டிலை பிடித்தாலும், 15 நாட்களுக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க  வேண்டிய கட்டாயத்தில் எடியூரப்பா உள்ளார். இதனையடுத்து அமித்ஷா உள்ளிட்டோரின் நேரடி கண்காணிப்பில் பல்வேறு வியூகங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன. இதில் ஒன்றாக எதிர் தரப்பில் வெற்றி பெற்றவர்களை ராஜினாமா செய்ய வைக்க வேண்டும் என்பதும் ஒன்றாகும். இதனிடையே நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு MLA-க்கள் பாஜ-வுக்கு ஆதரவு தரப்போகிறார்கள் என ஸ்ரீராமலு அறிவித்து பரபரப்பை அதிகப்படுத்தியுள்ளார்.

பரபரப்பான அரசியல் களத்தில் காங்., - மஜத கூட்டணிக்கு அதிர்ச்சி வைத்தியம் தரும் விதமாக வெற்றி பெற்ற இரண்டு காங்கிரஸ் MLA-க்களை பாரதிய ஜனதா வளைத்து விட்டதாக தெரிகிறது. விஜயநகர் தொகுதியில் போட்டியிட்டு MLA ஆகியுள்ள ஆனந்த் சிங், மஸ்கி தொகுதியில் போட்டியிட்டு MLA  ஆகியுள்ள பிரதாப் கவுடா பட்டேல் ஆகிய இருவரும் கட்சியின் கட்டுப்பாட்டில் இல்லாமல் மாயமாகியுள்ளனர். இதனால் காங்கிரஸ் தரப்பில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

மாயமான இரண்டு MLA-க்களும் பாரதிய ஜனதாவினர் வசம் சென்று விட்டதாகவும், இருவரும் தங்களது பதவியை ராஜினாமா செய்ய தயாராகிவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தொங்கு சட்டசபை அமைந்தது முதலே, ஆனந்த்சிங்கை காங்கிரஸ் தலைவர்களால் தொடர்பு கொள்ள முடியவில்லை. காங்கிரஸ் எம்.பி. டி.கே.சுரேஷ் இதை பகிரங்கமாகவே ஒப்புக்கொண்டார்.

அதே போல ராய்ச்சூர் மாவட்டம் மஸ்கி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற MLA பிரதாப் கவுடா பாட்டீலும் மாயமாகியுள்ளார். அவர் பெங்களூர் எச்ஏஎல் விமான நிலையத்தில் இருந்து சிறப்பு விமானத்தில் ஏதோ ஒரு இடத்திற்கு சென்றுள்ளார். அந்த சிறப்பு விமானத்தை ஏற்பாடு செய்தது, ரெட்டி சகோதரர்களில் ஒருவரான சோமசேகர ரெட்டி என்று தகவல் வெளியாகியுள்ளது. எப்படியும் ஆட்சியை நிலைக்க செய்துவிட வேண்டும் என்ற முனைப்பில் உள்ள பாரதிய ஜனதா இன்னும் என்னவெல்லாம் ஆட்டம் காட்ட போகிறதோ என காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சியினர் அதிர்ச்சியில் உள்ளனர்

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • polis_petrol11

  போலீசார் மீது பெட்ரோல் குண்டு வீச்சு; தூத்துக்குடியில் நீடிக்கிறது பதற்றம்

 • poepl_chennaii11

  சென்னை மக்களை வாட்டி வதைக்கும் கத்திரி வெயில் !...

 • thoothukudi_polissaa

  தூத்துக்குடியில் 2-வது நாளாக துப்பாக்கிச் சூடு : போலீஸ் வாகனங்களுக்கு தீவைப்பு

 • duchess_meganmarkel

  திருமணத்திற்கு பிறகு முதன்முறையாக டச்சஸ் ஆப் சுசக்ஸ் தோற்றத்துடன் உலா வந்த மேகன் மார்க்கல்

 • hyderabad_bustop11

  ஏசி, ஏடிஎம், காபி இயந்திரங்கள்,வைஃபை உள்ளிட்ட வசதிகளுடன் நவீன பேருந்து நிறுத்தம் :ஹைதராபாத்தில் வினோதம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்