SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தேவகவுடா பிரதமராக இருந்த போது குஜராத்தில் நடந்ததற்கு தற்போது கர்நாடகத்தில் பழித்தீர்த்ததா பாஜக...!

2018-05-17@ 15:29:49

பெங்களூரு: அறுதி பெரும்பான்மை இல்லாத பாரதிய ஜனதாவை கர்நாடகத்தில் ஆட்சியமைக்க ஆளுநர் வஜுபாய் வாலா அழைத்தது தவறு என எதிர்கட்சியினரும், அரசியல் விமர்சகர்களும் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்நிலையில் கடந்த 22 ஆண்டுகளுக்கு முன் குஜராத்தில் நடந்த சம்பவத்தை நினைத்து பார்த்தால் அதற்கு காரணமான காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதாதளத்தை தற்போது பாரதிய ஜனதா பழிவாங்குகிறதோ அல்லது விதி விளையாடுகிறதா என்று நினைக்க தோன்றுகிறது. கடந்த 1995-ம் ஆண்டில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. தற்போது கர்நாடக மாநில ஆளுநராக உள்ள வாஜூபாய் ரூதாபாய் வாலா கடந்த 1996-ல் குஜராத் மாநில பாரதிய ஜனதா தலைவராக இருந்தார். அப்போது குஜராத் முதல்வராக பாரதிய ஜனதாவின் சுரேஸ் மேத்தா இருந்தார்.

1996-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் முதல்வர் சுரேஷ் மேத்தாவுக்கு எதிராக அக்கட்சியின் மூத்த தலைவரான சங்கர் சிங் வகேலா போர்க்கொடி உயர்த்தினார். அவருடன் சில MLA-க்கள் கைகோர்த்ததால் நம்பிக்கை வாக்கெடுப்பிற்கு உத்தரவிடப்பட்டது. நம்பிக்கை வாக்கெடுப்பில் சுரேஷ் மேத்தா வெற்றி பெற்றார். எனினும் பேரவையில் பெரும் அமளி ஏற்பட்டது. எனினும் அன்றைய குஜராத் ஆளுநராக காங்கிரஸ் அரசால் நியமிக்கப்பட்ட கிருஷ்ணபால் சிங், குஜராத் மாநில பாரதிய ஜனதா அரசை கலைக்க பரிந்துரைத்தார். அவரின் பரிந்துரையின்பேரில் குஜராத் அரசு கலைக்கப்பட்டு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

அப்போது மத்தியில் பிரதமராக ஆட்சியில் இருந்தவர் தேவகவுடா. அவரது பரிந்துரையின் பேரிலேயே அன்றைய குடியரசுத் தலைவர் சங்கர் தயாள் சர்மா குஜராத் அரசைக் கலைத்தார். அந்த நேரத்தில் குஜராத் மாநில பாஜக தலைவராக இருந்தவர் வஜுபாய் வாலா. ஆட்சியை கலைக்க வேண்டாம் என கோரி கவர்னர் மாளிகைக்கு நடையாய் நடந்தார். ஆனால் அவரது எண்ணம் நிறைவேறவில்லை. நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற அரசை கலைத்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இது நடந்து 22 ஆண்டுகள் ஆயிற்று. தற்போது வஜுபாய் வாலா கர்நாடக ஆளுநராக உள்ளார். நடந்து முடிந்த தேர்தலில் பிரதான கட்சிகளான காங்கிரஸ், பாரதிய ஜனதா இரண்டுமே பெரும்பான்மை இடங்களை பெறவில்லை. எனவே சட்டென்று மஜத-த்துடன் கைகோர்த்த காங்கிரஸ் குமாரசாமியை முதல்வராக்கி பாரதிய ஜனதாவை ஆட்சிக்கு வரவிடாமல் தடுக்கலாம் என நினைத்தது. ஆனால் எடியூரப்பாவோ ஒரு சில இடங்களே எங்களுக்கு தேவை. 104 தொகுதிகளில் வென்ற எங்களுக்கு இன்னும் 8 MLA-க்களின் ஆதரவு மட்டுமே தேவை. எதிர்தரப்பில் நிறைய அதிருப்தி உறுப்பினர்கள் இருப்பதால் அவர்கள் நம்பிக்கை வாக்கெடுப்பில் எங்களுக்கு சாதகமா தான் வாக்களிப்பர் என்ற கோரிக்கையை ஆளுநரிடம் முன்வைத்தார். இதனையடுத்து பலத்த சர்ச்சைகளுக்கிடையே கவர்னர் வஜுபாய் வாலா, எடியூரப்பாவை ஆட்சியமைக்க அழைத்தார். இச்சம்பவத்தை நினைக்கும் போது முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்ற பழமொழி நினைவுக்கு வராமலில்லை...

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • franvve_heavyrain

  பிரான்சின் தென்மேற்குப் பகுதியில் பலத்த மழை : வெள்ளப் பெருக்கில் 13 பேர் உயிரிழப்பு

 • 16-10-2018

  16-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • HurricaneLesliePortugal

  போர்ச்சுக்கலை தாக்கிய 'லெஸ்லி' புயலால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிப்பு!

 • IndiaStatueOfUnity

  இறுதிப் பணிகள் நிறைவடைந்து கம்பீரமாய் காட்சியளிக்கும் சர்தார் வல்லபாய் பட்டேலின் சிலை: புகைப்படங்கள்

 • HBDAbdulKalam87

  ஏவுகணை நாயகன், மக்களின் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் அவர்களின் 87-வது பிறந்தநாள் இன்று..!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்