SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மேற்குவங்க உள்ளாட்சி தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் முன்னிலை

2018-05-17@ 14:28:05

கொல்கத்தா: மேற்குவங்க உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை தொடங்கியது. இதில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி முன்னிலையில் உள்ளதால் கட்சி தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர். மேற்கு வங்க மாநிலம் உள்ளாட்சி தேர்தலில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ், பாஜக, இடதுசாரிகள் மற்றும் காங்கிரஸ் கட்சி களத்தில் உள்ளன. தேர்தல் பரப்புரையின் போது பல்வேறு இடங்களில் நடைபெற்ற வன்முறைகளில் 20 பேர் உயிரிழந்தனர்.

வன்முறை நடந்த 568 வாக்குச்சாவடிகளில் நேற்று மறுவாக்குப்பதிவு நடந்தது. இந்நிலையில் பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் 110 கிராம பஞ்சாயத்துகளில் வெற்றி பெற்று திரிணாமுல் காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது. மேலும் 1,208 இடங்களில் அக்கட்சி முன்னிலை வகித்து வருகிறது. பாஜக 4 இடங்களிலும் மார்க்சிஸ்ட் கட்சி 3 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளனர். பாஜக 81 இடங்களிலும், மார்க்சிஸ்ட் கட்சி 58 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • delhi_skywalkopns

    டெல்லியில் பிரமாண்டமான ஐடிஓ நடை மேம்பாலம் திறப்பு !

  • 6thday_tirupathifestiv

    நவராத்திரி பிரம்மோற்சவம் 6 ஆம் நாள் : அனுமந்த வாகனத்தில் திருப்பதி மலையப்ப சுவாமி

  • odisa_andhratitli

    ஆந்திரா, ஒடிசாவில் 'தித்லி' புயல் தாண்டவமாடிய பேரழிவு புகைப்பட காட்சிகள் !

  • trumph_floodareaameric

    அமெரிக்காவின் புயல் பாதித்த பகுதிகளை பார்வையிட்ட டொனால்ட் டிரம்ப்!

  • 2018_kalambirth

    அப்துல்கலாம் பிறந்த நாள் கொண்டாட்டம் : நினைவிடத்தில் பல்வேறு அமைப்பினர், மாணவ மாணவிகள் மரியாதை!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்