SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருச்சியில் விவசாயிகள் தூக்கு போடும் போராட்டம் : ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணை திறக்க வலியுறுத்தல்

2018-05-17@ 11:49:12

திருச்சி : ஜூன் 12ம் தேதி குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடக்கோரி திருச்சியில் தற்போது விவசாயிகள் நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேட்டூர் அணையில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12ல் தண்ணீர் திறக்கப்பட்டு, மறு ஆண்டு ஜனவரி 28ல் அணை மூடப்படும். இந்தக் காலகட்டத்தில்  காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை, சம்பா, தாளடி சாகுபடிகள் நடைபெறும். 2011ம் ஆண்டு மே மாதம் திமுக ஆட்சி காலம் முடியும்போது மேட்டூர் அணையின்  நீர்மட்டம் 80 அடியாக இருந்தது. அதாவது அடுத்த குறுவைக்கு தண்ணீர் திறக்கும் அளவுக்கு அணையின் நீர்மட்டம் தயார் நிலையில் இருந்தது. இதனால் 2011ல் ஆட்சிக்கு வந்த அதிமுக அரசு மேட்டூர் அணையை 6 நாள் முன்னதாக, ஜூன் 6ம் தேதியன்று குறுவை சாகுபடிக்கு திறந்தது. அந்த ஆண்டில் குறுவை, சம்பா பிரச்னையின்றி விளைந்தது. அதன்பிறகு 2012ல் செப்டம்பர் 17ம் தேதியும், 13ல் ஆகஸ்ட் 2ம் தேதியும், 14ல் ஆகஸ்ட் 10ம் தேதியும், 15ல் ஆகஸ்ட் 9ம்  தேதியும் 16ல் செப்டம்பர் 20ம் தேதியும் மேட்டூர் அணை திறக்கப்பட்டது.  

இதனால் தொடர்ந்து 6 ஆண்டுகள் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டது. பம்ப்ஷெட் வசதி உள்ள விவசாயிகள் மட்டுமே, அதிலும் குறிப்பா கநாகை மாவட்டம்  மயிலாடுதுறை, குத்தாலம், செம்பனார்கோவில் பகுதி விவசாயிகள் மட்டுமே குறுவை சாகுபடி செய்தனர். மற்ற மாவட்டங்களில் பெயரளவுக்கு அங்கும் இங்குமாக குறுவை  சாகுபடி நடந்தது. கடந்த ஆண்டு எல்லாவற்றுக்கும் மேலாக அக்டோபர் 2ல்  தான் மேட்டூர் அணை பாசனத்திற்கு திறக்கப்பட்டது. அப்போது அணையின் நீர்மட்டம் 94.840 அடி(58.358டிஎம்சி) இருந்தது. எனவே கடந்த ஆண்டு பம்ப்ஷெட் வசதி உள்ளவர்கள் மட்டுமே குறுவை சாகுபடி செய்தனர்.

தொடர்ந்து கர்நாடகாவும் தமிழகத்துக்கு தர வேண்டிய தண்ணீரை தரவில்லை. மழையும்  எதிர்பார்த்த அளவு பெய்யவில்லை. இப்படியாக காவிரி டெல்டா மாவட்ட  விவசாயம் ஆண்டுக்கு ஆண்டு அதலபாதாளத்திற்கு சென்று கொண்டு இருக்கிறது. இந்நிலையில்  கடந்த பிப்ரவரி மாதம் 16ம் தேதி உச்சநீதிமன்றம் வழங்கிய காவிரி இறுதி  தீர்ப்பில் தமிழகத்திற்கு ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த 192 டிஎம்சி என்பது  177.25 டிஎம்சியாக குறைக்கப்பட்டு விட்டது. ஏற்கனவே காவிரி நடுவர்மன்றம்  தமிழகத்திற்கு எப்படி தண்ணீர் வழங்க வேண்டும் என 12 மாதத்திற்கும் பட்டியல்  வரையறை செய்திருந்தது. உச்சநீதிமன்ற இறுதி தீர்ப்பில் 14.75 டிஎம்சி  குறைக்கப்பட்டதால் தமிழகத்திற்கு இந்த ஆண்டு கிடைக்கும் தண்ணீரின் அளவு  மேலும் குறையும் ஆபத்து உள்ளது.

நடுவர் மன்ற இறுதி தீர்ப்பின்படி  ஜூன் மாதம் 10 டிஎம்சியும், ஜூலை 34, ஆகஸ்ட் 50, செப்டம்பர்40, அக்டோபர்  22, நவம்பர் 15, டிசம்பர் 8, ஜனவரியில் 3 டிஎம்சி, பிப்ரவரி முதல் மே  வரையிலான 4 மாதங்களும் தலா 2.5 டிஎம்சி தண்ணீர் கர்நாடகா, தமிழகத்திற்கு  வழங்கவேண்டும். ஆனால் உச்சநீதிமன்றம் இதை 177.25 ஆக குறைத்து விட்ட  நிலையில் அதற்கு ஏற்ப விகிதாச்சாரப்படி தமிழகத்திற்கு தண்ணீரை குறைக்க  சொல்லி உள்ளது.

இந்நிலையில் கடந்த 7 ஆண்டுகளாக குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12ம் தேதி திறந்துவிடக் கூடிய தண்ணீரானது தாமதம் ஆகிறது. இதனால் டெல்டா பகுதிகளில் உள்ள விவசாயிகளின் வாழ்வாதாரமானது கேள்வி குறியாகி உள்ள சூழ்நிலைதான் உருவாகியுள்ளது. காலதாமதமாக விடப்படும் தண்ணீரால் விவசாயிகள் நாங்கள் தூக்கு மாட்டி தற்கொலைக்கு தள்ளப்படும் நிலைதான் உருவாகியுள்ளது. மேலும் இந்த ஆண்டாவது மேட்டூர் அணையில் இருந்து சரியான நேரத்தில் தண்ணீர் திறக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி திருச்சி அண்ணா சிலை அருகே விவசாயிகள் தூக்கு மாட்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • chinaearthquake

    சீனாவின் யுன்னான் மாகாணத்தில் நிலநடுக்கம்: 18 பேர் காயம்

  • meteorshower

    ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் விண்கல் மழை: வானில் நிகழ்ந்த அதிசயம்

  • indonesiaafterquake

    இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் பாதிப்பு: மக்களின் வாழ்வாதாரம் முடக்கம்

  • sijaapanda

    சீனாவில் சிஜ்ஜா பாண்டா கரடியின் 12-வது பிறந்தநாள் கொண்டாட்டம்

  • inpendencedayrehearsal

    செங்கோட்டையில் சுதந்திர தின அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்