SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருவாடானை தொகுதியில் வரலாறு காணாத குடிநீர் தட்டுப்பாடு : தொடர் வறட்சியால் பாதிப்பு

2018-05-17@ 11:47:35

திருவாடானை: கோடைகாலம் வந்து விட்டாலே கடுமையான குடிநீர் பஞ்சம் ஏற்படுவது வாடிக்கையான ஒன்றாகி விட்டது. அரசு பல்வேறு குடிநீர் திட்டங்களை செயல்படுத்தியும், குடிநீர் தேவையை முழுமையாக பூர்த்தி செய்ய முடியவில்லை. அதிலும் இரண்டு வருட தொடர் வறட்சியால் குடிநீர் தட்டுப்பாடு வரலாறு காணாத அளவில் ஏற்பட்டுள்ளது. திருவாடானை தொகுதி முழுமையும் கடற்கரை கிராமங்களில் ஒரு குடம் தண்ணீர் ரூ.10 முதல் 15 வரை விலை கொடுத்து வாங்கி குளிக்கவும் குடிக்கவும் பயன்படுத்தி வருகின்றனர். உட்க்கடை கிராமப் பகுதிகளில் தொடர் வறட்சி காரணமாக கண்மாய்கள் குடிநீர் குளங்கள் அனைத்தும் வறண்டு போய் விட்டன. ஆடு, மாடுகளுக்கு கூட குடிக்க தண்ணீர் இல்லாமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அனைத்து கிராமங்களுக்கும் குடிநீர் குழாய் பாதிக்கப்பட்டு குடி தண்ணீர் விநியோகம் நடைபெற்று வந்தாலும், அதிக வறட்சியால் இடையில் உள்ள கிராம மக்கள் குடிநீர் குழாய்களை உடைத்து சேதப்படுத்தி விடுகின்றனர். இதனால் மற்ற கிராமங்களுக்கு குடிதண்ணீர் போய் சேருவதில்லை. இதுபோன்று குழாய்கள் உடைப்புகளை அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை. இப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், ‘‘வெளி மாவட்டத்தில் இருந்து குடி தண்ணீர் வருவதால், இங்கு வந்து சேர்வதில் பல இடையூறுகள் ஏற்பட்டு விடுகிறது. இப்பகுதியில் கிணறு, போர்வெல் அமைத்தால் பெரும்பான்மையாக உவர்நீர் ஆகவே வருகிறது.

ஆனால் 1200 அடி முதல் 1500 அடி வரை போர்வெல் அமைத்தால் நல்ல தண்ணீர் ஏராளமாக கிடைக்கிறது. எனவே முறையாக கருவிகளைக் கொண்டு ஆய்வு செய்து எந்த இடத்தில் தண்ணீர் கிடைக்கும் என்பதை தெரிந்து கொண்டு சுமார் 1500 அடி ஆழத்தில் போர்வெல் அமைத்து நிரந்தரமாக குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். திட்ட மதிப்பீட்டில் உள்ளபடி குறிப்பிட்ட ஆழம் வரை போர்வெல் அமைக்கப்படுகிறதா? என்பதனை கண்காணிக்க குழு அமைத்து அதன்பின் ஒப்பந்ததாரர்களுக்கு பணம் வழங்க வேண்டும்’’ என்றனர்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • ramalan_sirapu111

    இஸ்லாமியர்கள் கடைபிடிக்கும் ரமலான் நோன்பு ! : சிறப்பு படங்கள்

  • cake_decor11

    ஆஸ்திரேலிய சர்வதேச கேக் திருவிழா : மனதை கொள்ளை கொள்ளும் கேக் அலங்காரங்கள்

  • RajivGandhi27thanniversary

    ராஜீவ் காந்தியின் 27-வது நினைவு தினம் இன்று: சோனியா காந்தி, ராகுல் காந்தி அஞ்சலி

  • lasvegas_theme111

    அமெரிக்காவின் லாஸ்வேகாஸ் மேடிசன் சதுக்கத்தில் வெவ்வேறு தீம்களில் ஜொலிக்கும் பிரம்மாண்ட கோள அரங்கம்

  • rajiv_27anni

    27வது நினைவு தினத்தை அனுசரிக்கும் மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் அரிய புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்