SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

குமரி மாவட்டத்தில் கன்னிப்பூ சாகுபடிக்கு தயாராகும் விவசாயிகள் : நாற்றங்கால் நடவுபணி மும்முரம்

2018-05-17@ 11:46:50

நாகர்கோவில்:  குமரி மாவட்டத்தில் விவசாயிகள் கன்னிப்பூ சாகுபடிக்கு தயாராகி வருகின்றனர். தேரூர், தாழக்குடி, துவரங்காடு பகுதியில் நாற்றங்கால் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. குமரி மாவட்டத்தில் இரு போக நெல் சாகுபடி நடந்து வருகிறது. கன்னிப்பூ சாகுபடி ஜூன் மாதம் தொடங்கும். அதற்கு முன்பு சாகுபடிக்கு தயாராகும் வகையில் நாற்றங்கால் தயாரிக்கும் பணி மும்முரமாக நடக்கும். விவசாயத்திற்கு பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளில் உள்ள தண்ணீரை நம்பியே விவசாயிகள் உள்ளனர். அதனை தவிர்த்து குளத்து பாசனத்தையும் பயன்படுத்தி வருகின்றனர். தற்போது பேச்சிப்பாறை அணையை பலப்படுத்தும் பணி நடந்து வருகிறது.

இந்த பணி 2019ல் முடிவடையும். இதனால் அணையில் தண்ணீரை தேக்கி வைக்க முடியாத நிலை இருந்து வருகிறது. இதனால் விவசாயிகள் கன்னிப்பூ சாகுபடி செய்வது எப்படி என தவித்தனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கலெக்டர் தலைமையில் விவசாயிகளுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது. அப்போது பேச்சிப்பாறை அணையில் தண்ணீர் இல்லாததால் மாற்று பயிர்கள் சாகுபடி செய்யலாமா என்ற அடிப்படையில் விவசாயிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு மாவட்ட நிர்வாக தரப்பில் மழை மூலம் பேச்சிப்பாறை அணைக்கு வரும் தண்ணீர் வெளியேற்றப்பட்டு கொண்டே இருக்கும்.  அந்த தண்ணீரை கொண்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து குளங்களிலும் தண்ணீர் இருப்பு வைக்கப்படும்.

இதனை விவசாயத்திற்கு பயன்படுத்திக்கொள்ளலாம். மேலும் பெருஞ்சாணி, சிற்றார்1, சிற்றார்2 ஆகிய அணைகளில் தண்ணீர் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. அந்த தண்ணீர் விவசாயத்திற்கு பயன்படும் வகையில் திறந்து விடப்படும். இதனால் விவசாயிகள் கவலை இன்றி கன்னிப்பூ சாகுபடி செய்யலாம் என
தெரிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் நாற்றங்கால் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். பறக்கை, சுசீந்திரம் பகுதியில் குளத்தை நம்பியே சாகுபடி நடக்கிறது. தற்போது பறக்கை, சுசீந்திரம் குளத்தில் தண்ணீர் உள்ளது. இதனை பயன்படுத்தி அவர்கள் கன்னிப்பூ சாகுபடி தொடங்கியுள்ளனர். இதுபோல் துவரங்காடு, தேரூர், தாழக்குடி உள்ளிட்ட பகுதிகளில் கன்னிப்பூ சாகுபடிக்கு தயாராகி வருகின்றனர்.

இது குறித்து விவசாயி செண்பகசேகர பிள்ளை கூறியதாவது: பேச்சிப்பாறை அணையில் பணி நடந்து வருவதால், கன்னிப்பூ சாகுபடி எப்படி நடக்கும் என்ற கேள்வி எங்கள் மத்தியில் இருந்து வந்தது. மாவட்டத்தில் உள்ள குளங்களை நிரப்பி அதன்மூலம் விவசாயத்திற்கு தண்ணீர் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.  மேலும் பேச்சிப்பாறை அணையில் இருந்து வெளியேற்றப்படும் அனைத்து நீரும் குளத்திற்கு செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால் தேவையான தண்ணீர் கிடைக்கும் என அதிகாரிகள் தரப்பில் உறுதி தந்துள்ளனர்.

அதன் அடிப்படையில் சாகுபடி பணியை மேற்கொண்டுள்ளனர். மாவட்டத்தில் பெருஞ்செல்வவிளை, தாழக்குடி, துவரங்காடு உள்பட சுமார் 1500 ஹெக்டர் பரப்பளவில் உளுந்து சாகுபடி செய்யப்பட்டுள்ளது. அந்த பயிர்கள் அறுவடை மே 20ம் தேதிக்குள் முடிவடையும். அதனை தொடர்ந்து வயல்களில் நாற்று நடும் பணியும், விதைவிதைப்பு பணியும் தொடங்கும். அதற்காக முதற்கட்டமாக தற்போது தேரூர், தாழக்குடி, துவரங்காடு உள்ளிட்ட பகுதிகளில் நாற்றங்கால் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. பறக்கை, சுசீந்திரம் பகுதியில் குளத்து தண்ணீரை பயன்படுத்தி வயல்களில் நாற்று நட்டுள்ளனர். பருவமழை உரிய நேரத்தில் பெய்தால், எந்த வித பயமும் இன்றி சாகுபடி செய்த நெல்லை அறுவடை செய்து முடிப்போம் என்றார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-10-2018

    20-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • tirupathivavacha

    திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம் : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு

  • kulasaidasaraeight

    வெகு விமர்சையாக கொண்டாப்பட்டு வரும் குலசேகரபட்டிணம் தசரா திருவிழா

  • 18-10-2018

    18-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • thaneerrr_kaari

    தொடரும் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் : சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்