SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருமயம் அருகே குளத்துப்பட்டியில் மஞ்சுவிரட்டு : காளைகள் முட்டி 3 பேர் காயம்

2018-05-17@ 11:11:21

திருமயம்: திருமயம் அருகே கோயில் திருவிழாவை  முன்னிட்டு நடந்த மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியில், காளைகள் முட்டியதில் 3 பேர் காயமடைந்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள குளத்துப்பட்டி அந்தரநாச்சி அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு நேற்று காலை குளத்துப்பட்டி கண்மாய் திடலில் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் புதுக்கோட்டை, காரைக்குடி, பள்ளத்தூர், திருமயம்,  சிவகங்கை, திருப்பத்தூர், கோனாபட்டு, கே.பள்ளிவாசல், கீழசீவல்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து சுமார் 150க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டன.

முதலில்  உள்ளூர் கோயில் காளை அவிழ்த்துவிடப்பட்டது. இதைத்தொடர்ந்து வெளியூர்களில் இருந்து வந்த காளைகள் அவிழ்த்துவிட்டன. மாடுகள் முட்டியதில் 3 பேர் லேசான காயமடைந்தனர். காயமடைந்தவர்களுக்கு மஞ்சுவிரட்டு திடலில் இருந்த மருத்துவ குழுவினர் முதலுதவி சிகிச்சை அளித்தனர். மஞ்சுவிரட்டை காண சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பெருந்திரளானோர் வந்திருந்தனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-01-2019

    23-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • aalangatty_kanamalai11

    டெல்லியில் பெய்த கனமழை மற்றும் ஆலங்கட்டி மழை காரணமாக போக்குவரத்து முடக்கம்

  • northensnow

    பனிப்பொழிவால் உறைந்த வட மாநிலங்கள் : இயல்பு வாழ்க்கை பாதிப்பு

  • baloon_worstand

    ஆந்திராவின் அரக்கு பகுதியில் சர்வதேச பலூன் திருவிழா : பிரமாண்ட வண்ண பலூன்களால் பார்வையாளர்கள் பரவசம்

  • redmoon_lunar12

    சிவப்பு நிறத்தில் காட்சியளித்த நிலவு! : வானில் தோன்றிய முழு சந்திர கிரகணம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்