SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கும்பக்கரை அருவியில் மீண்டும் வெள்ளப்பெருக்கு : சுற்றுலாப்பயணிகள் குளிக்க தடை

2018-05-17@ 11:10:35

பெரியகுளம்: வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கும்பக்கரை அருவியில் சுற்றுலாப்பயணிகள் குளிக்க நேற்று மீண்டும் வனத்துறை தடை விதித்தது. தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே 8 கிமீ தொலைவில் கும்பக்கரை அருவி உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மற்றும் கொடைக்கானல் பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக அருவிக்கு நேற்று நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

அருவிக்கு அபாய அளவை தாண்டி தண்ணீர் வருவதால் பாதுகாப்பு கருதி சுற்றுலாப்பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். மேலும் தண்ணீர் வரத்து சீராகும் வரை சுற்றுலாப்பயணிகள் அருவியில் குளிக்க அனுமதி இல்லை என வனத்துறையினர் தெரிவித்தனர்.வெள்ளப்பெருக்கால் 10 நாட்களாக அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த 14ம் தேதி நீர்வரத்து குறைந்ததால் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது. தற்போது மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலாப்பயணிகள் குளிக்க நேற்று தடை விதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • chinaearthquake

    சீனாவின் யுன்னான் மாகாணத்தில் நிலநடுக்கம்: 18 பேர் காயம்

  • meteorshower

    ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் விண்கல் மழை: வானில் நிகழ்ந்த அதிசயம்

  • indonesiaafterquake

    இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் பாதிப்பு: மக்களின் வாழ்வாதாரம் முடக்கம்

  • sijaapanda

    சீனாவில் சிஜ்ஜா பாண்டா கரடியின் 12-வது பிறந்தநாள் கொண்டாட்டம்

  • inpendencedayrehearsal

    செங்கோட்டையில் சுதந்திர தின அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்