SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வறட்சியால் சொட்டுநீர் பாசனத்துக்கு மாறிவரும் விவசாயிகள்

2018-05-17@ 11:09:57

துறையூர்: துறையூர் தாலுகாவில் வறட்சியாலும், ஆழ்துளை கிணறுகள் வறண்டுபோனதாலும் விவசாயிகள் சொட்டுநீர் பாசனத்திற்கு மாறியுள்ளனர். துறையூர் தாலுகாவில் உப்பிலியபுரம், துறையூர் ஆகிய ஊராட்சி ஒன்றிய பகுதிகள் உள்ளன. உப்பிலியபுரம் ஒன்றியத்தில் பி.மேட்டூர், வைரிசெட்டிப்பாளையம், கோட்டபாளையம், வலையப்பட்டி, எரகுடி, பாலகிருஷ்ணம்பட்டி உள்ளிட்ட பல ஊர்களில் கொல்லிமலையில் உருவாகும் ஐயாற்றின் நீரால்  ஏரிகள் நிரம்பும்போது ஆற்றுப்பாசனம், கிணற்றுபாசனம், ஏரிபாசனம் மூலம் விவசாயம் நடைபெறுகிறது. ஆனால் துறையூர் பகுதியில் ஏரிப்பாசனத்துடன் பெரும்பாலும் கிணற்றுப்பாசனத்தை நம்பியே விவசாயிகள் உள்ளனர். தற்போது மழைபொழியாததால் ஏரிகளில் நீர்இல்லை.

ஆழ்துளை கிணறுகளை அமைத்து விவசாயம் செய்து வந்தாலும் நிலத்தடி நீர்மட்டம் 800 அடிக்கும் கீழேசென்று விட்டதால் ஆழ்துளை கிணறுகளும் வறண்டு விடுகிறது.இதனால் புதியஆழ்துளை கிணறு அமைக்க அதிகசெலவு ஆவதுடன் நீர்வரும் என்ற நம்பிக்கையும் இல்லாமல் உள்ளது.எனவே நவீனதொழில்நுட்பத்துடன் கூடிய சொட்டுநீர் பாசன கருவிகளைக் கொண்டு சிக்கனமாக நீரை பயன்படுத்தி விவசாயம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். குழாய்களை வயல்களில ஆங்காங்கே பொருத்தி அதன்மூலம் நீரை செலுத்தி குழாய்களை சுற்றும்படி செய்துள்ளனர். இதனால் வயல்களில் மழைபோல் நீர்தெளிக்கப்பட்டு குறைந்த நீரைக் கொண்டு விவசாயம் செய்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • chinaearthquake

    சீனாவின் யுன்னான் மாகாணத்தில் நிலநடுக்கம்: 18 பேர் காயம்

  • meteorshower

    ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் விண்கல் மழை: வானில் நிகழ்ந்த அதிசயம்

  • indonesiaafterquake

    இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் பாதிப்பு: மக்களின் வாழ்வாதாரம் முடக்கம்

  • sijaapanda

    சீனாவில் சிஜ்ஜா பாண்டா கரடியின் 12-வது பிறந்தநாள் கொண்டாட்டம்

  • inpendencedayrehearsal

    செங்கோட்டையில் சுதந்திர தின அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்