SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஊட்டியில் கனமழையால் படகு போட்டி ரத்து

2018-05-17@ 11:09:19

ஊட்டி:  ஊட்டியில் நேற்று நடக்கவிருந்த படகு போட்டி கனமழை காரணமாக தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டதாக சுற்றுலாத்துறை அறிவித்துள்ளது.  ஆண்டு தோறும் கோடை காலத்தின் போது ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க பல்வேறு போட்டி கண்காட்சி ஆகியவை நடத்தப்படுகிறது. சுற்றுலாத்துறை மூலம் ஊட்டி படகு இல்லத்தில் ஆண்டு தோறும் படகு போட்டி மற்றும் படகு அலங்கார போட்டி ஆகியவை நடத்தப்படுகிறது. இதில், ஆர்வமுடன் சுற்றுலா பயணிகள் பங்கேற்பார்கள். இந்த ஆண்டிற்கான போட்டிகள் நேற்று ஊட்டியில் உள்ள ஏரியில் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து, ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் குவிந்தனர். நேற்று பகல் 12 மணிக்கு போட்டிகளை துவக்க  ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

ஆண்கள் இரட்டையருக்கான போட்டிகளில் கலந்துக் கொள்பவர்கள் படகு போட்டி நடக்கும் ஏரியின் மறு கரைக்கு சென்றனர். அதற்கு மழை வந்தது. போட்டிகளை துவக்கி வைக்க வந்திருந்த கலெக்டர் இன்னசென்ட் திவ்யா உட்பட அதிகாரிகள் அனைவரும் சுமார் அரை மணி நேரம் காத்திருந்தனர். ஆனால், மழை ஓயாத நிலையில், போட்டிகள் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாகவும், பிற்பகல் 3 மணிக்கு நடக்கும் என அறிவிக்கப்பட்டது.

மேலும், படகு போட்டிக்கு சென்றவர்கள் மழையில் மாட்டிக் கொள்ளாமல் இருக்க மோட்டார் படகுகள் கொண்டுச் சென்று, அவர்களை ஊழியர்கள் கரைக்கு அழைத்து வந்தனர். தொடர்ந்து மழை பெய்த நிலையில், பிற்பகல் 2 மணிக்கு போட்டி ரத்து செய்யப்பட்டதாகவும், வேறு ஒரு நாளில் நடத்தப்படுவதாகவும் சுற்றுலாத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். படகு போட்டியில் கலந்துக் கொள்வதற்காக நேற்று காலையில் இருந்து மாலை வரை ஊட்டி ஏரியில் காத்திருந்த நிலையில், போட்டிகள் ரத்து செய்யப்பட்டதால் சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-01-2019

    23-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • aalangatty_kanamalai11

    டெல்லியில் பெய்த கனமழை மற்றும் ஆலங்கட்டி மழை காரணமாக போக்குவரத்து முடக்கம்

  • northensnow

    பனிப்பொழிவால் உறைந்த வட மாநிலங்கள் : இயல்பு வாழ்க்கை பாதிப்பு

  • baloon_worstand

    ஆந்திராவின் அரக்கு பகுதியில் சர்வதேச பலூன் திருவிழா : பிரமாண்ட வண்ண பலூன்களால் பார்வையாளர்கள் பரவசம்

  • redmoon_lunar12

    சிவப்பு நிறத்தில் காட்சியளித்த நிலவு! : வானில் தோன்றிய முழு சந்திர கிரகணம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்