SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காதலித்த பெண்ணை திருமணம் செய்வதாக கூறிய இளைஞரின் கண்ணை தோண்டிய கொடூர தந்தை

2018-05-17@ 10:56:07

நஸிராபாத்: காதலித்த பெண்ணை தான் திருமணம் செய்யப் போவதாக கூறிய இளைஞரின் கண்கள் தோண்டி எடுக்கப்பட்ட சம்பவம் பாகிஸ்தானில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பலூசிஸ்தான் மாகாணத்தில் நஸிராபாத் என்ற பகுதியை சேர்ந்த இளைஞர் அப்துல் பாகி. இவரது வயது 22. இவர் ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். இது குறித்து தனது பெற்றோர் மற்றும் சகோதரர்களிடம் கூறியுள்ளார். காதலிக்கும் பெண்ணையே தாம் திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும் கூறியுள்ளார். இதனை கேட்டு ஆத்திரமடைந்த அப்துல் பாகியின் 70 வயது தந்தை மற்றும் அவரது 4 சகோதரர்களும் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வாக்குவாதம் முற்றிய நிலையில் திடீரென தந்தை மற்றும் சகோதரர்கள் என 5 பேரும் அப்துல் பாகி மீது சரமாரியாக தாக்குதல் நடத்தினர். ஒருகட்டத்தில் சகோதரர்கள் அப்துல் பாகியை பிடித்து கொள்ள அவரது தந்தை ஸ்பூன் போன்ற ஒரு ஆயுதத்தை வைத்து அப்துல் பாகியின் கண்களை சரமாரியாக தாக்கி தோண்டியுள்ளார். ஆத்திரம் அடங்காத அந்த கும்பல் அவரது கை நரம்பையும் கத்தியால் அறுத்துள்ளது. சம்பவங்களை பார்த்து அதிர்ச்சியில் உறைந்த அப்துல் பாகியின் தாய் தடுக்க முற்பட்டுள்ளார். ஆனால் அவரை ஒரு அறையில் வைத்து பூட்டி விட்டனர். சத்தம் கேட்டு திரண்ட அக்கம் பக்கத்தை சேர்ந்தவர்கள் அப்துல் பாகியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதனையடுத்து கொடூர தாக்குதலில் ஈடுபட்டவர்களை போலீஸார் கைது செய்துள்ளனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • gggooooverrr

    அமெரிக்காவில் கவர்னர் பதவிக்கான போட்டிக் களத்தில் திருநங்கை - தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் திருநங்கை கவர்னர்

  • affffgaaaaa

    ஆப்கானிஸ்தானில் பள்ளியில் தற்கொலைப்படைத் தாக்குதல் - 48 பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு

  • iiiiiiiiiiitaaalyyy

    இத்தாலியில் நெடுஞ்சாலைப் பாலம் இடிந்து விழுந்து விபத்து - 39 பேர் பலி

  • keeeraaalaaaa

    கேரளாவில் கனமழை - வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 70ஆக உயர்வு 14 மாவட்டங்களிலும் 'ரெட்' அலர்ட்

  • buildingggggg1234

    சுதந்திர தின விழா - நாடு முழுவதும் அரசு கட்டிடங்கள் மூவண்ண நிறங்களில் ஜொலித்தது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்