SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கடைசி கட்டத்தில் பூம்ரா அசத்தல் பந்துவீச்சு மும்பை இந்தியன்ஸ் வெற்றி

2018-05-17@ 06:23:26

மும்பை: வேகப்பந்து வீச்சாளர் பூம்ராவின் மாயாஜால பந்து வீச்சால், பஞ்சாப் கிங்ஸ் லெவன் அணியை கடைசி கட்டத்தில் 3 ரன் வித்தியாசத்தில் மும்பை அணி அபாரமாக வெற்றி பெற்றது. வாங்கடே மைதானத்தில் நேற்று இரவு நடந்த ஐபிஎல் போட்டியில், டாசில் வென்ற கிங்ஸ் லெவன் அணி முதலில் பந்துவீசியது. அந்த அணியில் மயாங்க் அகர்வால், கருண் நாயருக்கு பதிலாக யுவராஜ் சிங், மனோஜ் திவாரி இடம் பெற்றனர். மும்பை இந்தியன்ஸ் அணியில் ஜே.பி.டுமினிக்கு பதிலாக போலார்டு சேர்க்கப்பட்டார்.

சூரியகுமார் யாதவ், எவின் லூயிஸ் இருவரும் மும்பை இன்னிங்சை தொடங்கினர். லூயிஸ் 9 ரன் எடுத்து ஆண்ட்ரூ டை வேகத்தில் ஸ்டம்புகள் சிதற வெளியேறினார். அடுத்து சூரியகுமாருடன் இஷான் கிஷண் இணைந்தார். இஷான் 20 ரன் (12 பந்து, 1 பவுண்டரி, 2 சிக்சர்), சூரியகுமார் 27 ரன் (15 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி ஆண்ட்ரூ டை வீசிய 6வது ஓவரில் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, மும்பை அணி திடீர் சரிவை சந்தித்தது. அடுத்து வந்த கேப்டன் ரோகித் ஷர்மா 6 ரன் மட்டுமே சேர்த்து ராஜ்பூத் பந்துவீச்சில் யுவராஜ் சிங்கிடம் பிடிபட்டார். 10 ஓவர் முடிந்த நிலையில், மின்விளக்குகள் பழுதடைந்ததால் ஆட்டம் சிறிது நேரம் தடைபட்டது. பின்னர் தொடர்ந்த ஆட்டத்தில், குருணல் பாண்டியா - போலார்டு ஜோடி அபாரமாக விளையாடி ரன் குவித்தது. பவுண்டரியும் சிக்சருமாகப் பறக்க விட்ட இருவரும் 5வது விக்கெட்டுக்கு 65 ரன் சேர்த்தனர்.

குருணல் 32 ரன் (23 பந்து, 1 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி ஸ்டாய்னிஸ் பந்துவீச்சில் ராஜ்பூத் வசம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார். போலார்டு 22 பந்தில் அரை சதம் அடித்தார். அவர் 50 ரன் எடுத்து (23 பந்து, 5 பவுண்டரி, 3 சிக்சர்) அஷ்வின் சுழலில் பிஞ்ச் வசம் பிடிபட்டார். பென் கட்டிங் 4 ரன், ஹர்திக் பாண்டியா 9 எடுத்து வெளியேறினர். மும்பை அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 186 ரன் குவித்தது.  மெக்லநாகன் 11 ரன், மார்கண்டே 7 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். கிங்ஸ் லெவன் பஞ்சாப் பந்துவீச்சில் ஆண்ட்ரூ டை 4, அஷ்வின் 2, ராஜ்பூத், ஸ்டாய்னிஸ் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

அடுத்து களமிறங்கிய கிங்ஸ் லெவன் அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 183 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. கே.எல்.ராகுல் அதிகபட்சமாக 94 ரன்கள் (60 பந்து, 10 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசினார். ஏ.ஆர் படேல் 10 ரன், எம்.கே.திவாரி 4 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். மும்பை பந்துவீச்சில் பூம்ரா 4 ஓவர்களில் 3 விக்கெட் வீழ்த்தினார். இவர் ஆட்ட நாயகன் விருது பெற்றார். கடைசி கட்ட பந்து வீச்சில் இவர் ராகுல் விக்கெட் உட்பட 3 விக்கெட்டுகளை வீழ்த்தி, மும்பையின் வெற்றிக்கு வழிவகுத்தார். மும்பை அணி 2 புள்ளிகள் பெற்று பிளே ஆப் சுற்று வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 22-01-2019

  22-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • annauniv

  அண்ணா பல்கலைக்கழகத்தில் சர்வதேச ஆவணப்படங்கள் விழா: கவர்னர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்பு

 • jammukashmir

  ஜம்மு-காஷ்மீர் பனிச்சரிவில் சிக்கியவர்களை கண்டுபிடிக்க தொடரும் மீட்புப்பணிகள்: 7 சடலங்கள் மீட்பு!

 • TulipflowerDay

  நெதர்லாந்தில் தேசிய துலிப் மலர் தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது

 • womesrally

  வுமென்ஸ் மார்ச் 2019: உலகின் பல்வேறு பகுதிகளில் பெண்கள் ஒன்று திரண்டு பேரணி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்