SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அணு ஆயுதத்தை கைவிடும்படி ஒருதலைப்பட்சமாக வலியுறுத்தினால் சிங்கப்பூர் பேச்சை ரத்து செய்வோம் : அமெரிக்காவுக்கு வடகொரியா எச்சரிக்கை

2018-05-17@ 03:44:17

சியோல் : ‘அணு ஆயுதங்களை கைவிடும்படி ஒரு தலைபட்சமாக வற்புறுத்தினால், சிங்கப்பூரில் அடுத்த மாதம் அமெரிக்க அதிபர் டிரம்ப்புடன் நடக்கும் பேச்சுவார்த்தையை ரத்து செய்வோம்’ என வடகொரியா எச்சரித்துள்ளது.  வடகொரியா அதிபர் கிம் ஜோங் உன், தென்கொரியா  சென்று அதிபர் மூன் ஜேவை கடந்த ஏப்ரல் 27ம் தேதி சந்தித்து பேசினார்.  இதை தொடர்ந்து அமெரிக்கஅதிபர் டிரம்ப்-  கிம்  ஜோங் உன் ஆகியோர் சிங்கப்பூரில் அடுத்த மாதம் 12ம் தேதி சந்தித்துப் பேச முடிவு செய்யப்பட்டது. அதிபர் கிம் ஜோங் உன் சந்திப்பின் போது வடகொரியாவை தனது அணு ஆயுதங்களை கைவிட வைப்பது பற்றி டிரம்ப் வலியுறுத்துவார் என தகவல்கள் வெளியாயின. ஆனால், அணு ஆயுதத்தை முற்றிலும் கைவிடுவதாக வடகொரியா இதுவரை எந்த உறுதியும் அளிக்கவில்லை. அமெரிக்காவிடம் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள அணு ஆயுதம் தேவை எனவும் வடகொரியா நீண்ட காலமாக கூறிவருகிறது.

லிபியாவை போல் வடகொரியாவையும் அணு ஆயுதங்களை முழுமையாக அழிக்க வைக்க முயற்சி எடுப்போம் என அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் கூறியிருந்தார். அணு ஆயுத ஒழிப்புக்கு வடகொரியா சம்மதித்தால் அந்நாட்டுக்கு அமெரிக்கா பொருளாதார உதவி செய்யும் என அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக்க பாம்பியோ கூறினார். இந்நிலையில், திடீர் திருப்பமாக வடகொரிய வெளியுறவுத்துறை அமைச்சர் கிம் கீ குவான் விடுத்துள்ள அறிக்கையில், ‘அணு அயுதங்களை கைவிடும்படி ஒரு தலைபட்சமாக வற்புறுத்த அமெரிக்கா முயன்றால், அது போன்ற பேச்சுவார்த்தையில் எங்களுக்கு விருப்பம் இல்லை. இரு அதிபர்கள் இடையே சிங்கப்பூரில் அடுத்த மாதம் 12ம் தேதி நடக்கும் சந்திப்பை ரத்து செய்வோம். எங்கள் பொருளாதாரத்தை மேம்படுத்த அமெரிக்காவின் உதவியை நாங்கள் எதிர்பார்க்கவில்லை’ என கூறியுள்ளார்.

சிங்கப்பூர் சந்திப்பு ஏற்பாடு நடக்கிறது
வடகொரியாவின் மிரட்டல் அறிக்கை பற்றி அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை விடுத்துள்ள செய்தியில், ‘வடகொரியா தெரிவித்த கருத்து பற்றி அமெரிக்கா ஆலோசிக்கும். சிங்கப்பூர் சந்திப்புக்கான ஏறபாடு தொடர்ந்து நடக்கிறது. இந்த சந்திப்பு ரத்து செய்யப்படுவது குறித்து வடகொரியாவிடம் இருந்து எந்த தகவலும் இல்லை. தென்கொரியா-அமெரிக்கா கூட்டு ராணுவ பயிற்சி, வடகொரியாவை எரிச்சலூட்டுவதற்காக நடத்தப்படவில்லை. அந்த பயிற்சி தொடரும்’ என தெரிவித்துள்ளது.

வடகொரியா எரிச்சல்
தென்கொரியா-அமெரிக்கா இடையே ‘மேக்ஸ் தண்டர்’ என்ற பெயரில் கடந்த வெள்ளிக்கிழமை கூட்டு போர் பயிற்சி தொடங்கியது. இது, இரண்டு வாரங்கள் நடக்கிறது. இதில், இரு நாடுகளையும் சேர்ந்த 100 போர் விமானங்கள் பங்கேற்கின்றன. இது வடகொரியாவுக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தென்கொரியாவுடன் நேற்று நடப்பதாக இருந்த உயர்மட்ட பேச்சுவார்த்தையை வடகொரியா ரத்து செய்தது.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • ramalan_sirapu111

    இஸ்லாமியர்கள் கடைபிடிக்கும் ரமலான் நோன்பு ! : சிறப்பு படங்கள்

  • cake_decor11

    ஆஸ்திரேலிய சர்வதேச கேக் திருவிழா : மனதை கொள்ளை கொள்ளும் கேக் அலங்காரங்கள்

  • RajivGandhi27thanniversary

    ராஜீவ் காந்தியின் 27-வது நினைவு தினம் இன்று: சோனியா காந்தி, ராகுல் காந்தி அஞ்சலி

  • lasvegas_theme111

    அமெரிக்காவின் லாஸ்வேகாஸ் மேடிசன் சதுக்கத்தில் வெவ்வேறு தீம்களில் ஜொலிக்கும் பிரம்மாண்ட கோள அரங்கம்

  • rajiv_27anni

    27வது நினைவு தினத்தை அனுசரிக்கும் மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் அரிய புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்