SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காட்பாடியில் இருந்து சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டது : ரயில் சேவை பாதிப்பு

2018-05-17@ 03:26:49

கலசப்பாக்கம் : காட்பாடியில் இருந்து சென்ற சரக்கு ரயில் கலசப்பாக்கம் அருகே நேற்று தடம்புரண்டது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
காட்பாடி- விழுப்புரம் இடையே ரயில் தினமும் இயக்கப்படுகிறது. இவ்வழியாக சரக்கு ரயில்களும் செல்கின்றன. நேற்று காலை விழுப்புரம் நோக்கி  சிமென்ட் மற்றும் அரிசி மூட்டைகளை ஏற்றிக்கொண்டு 51 பெட்டிகளுடன் சரக்கு ரயில் காட்பாடி வழியாக சென்றது. திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அடுத்த பெரியகாலூர் கிராமம் அருகே சென்றபோது 23வது பெட்டி திடீரென கழன்று தண்டவாளத்தில் இருந்து இறங்கியது. மேலும் 2 பெட்டிகள் தடம் புரண்டது. இதில் 23ம் பெட்டி மின்கம்பங்கள் மீது மோதியதில் 5 மின்கம்பங்கள் முற்றிலும் சேதமடைந்தது. மின் வயர்கள் அறுந்து விழுந்தன.

சத்தம் கேட்டு அதிர்ச்சியடைந்த டிரைவர் இன்ஜினை நிறுத்தினார். அவர் கொடுத்த தகவலின்பேரில்  ரயில்வே போலீசார் மற்றும் அதிகாரிகள், ஊழியர்கள் வந்து சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர். இதனிடையே சரக்கு ரயிலில் இருந்த 3 பிரேக் கம்ப்ரசர்களும் தூக்கிவீசப்பட்டிருந்தது தெரியவந்தது. சரக்கு ரயில் என்பதால் உயிரிழப்பு  ஏற்படவில்லை. இந்த விபத்து காரணமாக மன்னார்குடியில் இருந்து திருப்பதி செல்லும் பயணிகள் ரயில் திருவண்ணாமலையிலும், புதுச்சேரி- ஹவுரா செல்லும் குருலியா எக்ஸ்பிரஸ் ரயில் திருவண்ணாமலை அருகிலும் நிறுத்தப்பட்டுள்ளது. சீரமைப்பு பணிகள் முடிந்த பின்னரே ரயில் போக்குவரத்து தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விபத்து குறித்து தகவலறிந்த காட்பாடி ரயில்வே ஊழியர்கள் சீரமைப்பு பணிகளை முழுவீச்சில் மேற்கொண்டு வருகின்றனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • VenezuelaProtestMaduro

    அதிபர் மதுரோ பதவி விலகக்கோரி வெனிசுலாவில் வலுப்பெற்றுள்ள போராட்டம்: வன்முறையில் இதுவரை 13 பேர் பலி

  • ChinaAIRestaurant

    முழுக்க முழுக்க ரோபோக்களால் செயல்படும் உணவகம்..: சீன தலைநகர் பெய்ஜிங்கில் திறப்பு

  • GreenLandIceLoss

    கிரீன்லாந்தில் நான்கு மடங்கு அதிகமாக உருகி வரும் பனிப்பாளங்கள்..: விஞ்ஞானிகள் கவலை!

  • BuShFiReTaSmAnIa

    ஆஸ்திரேலிய புதர்காடுகளில் பற்றி எரியும் காட்டுத் தீ...: 720 கி.மீ தூரத்திற்கு தீ பரவும் அபாயம்

  • 24-01-2019

    24-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்