SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காவிரி மேலாண்மை வாரியம் மத்திய அரசின் காலம் கடத்தும் முயற்சிக்கு முடிவு கட்ட வேண்டும் : விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு கோரிக்கை

2018-05-17@ 03:25:06

மன்னார்குடி : காவிரி மேலாண்மை வாரிய பிரச்னையில் மத்திய அரசின் காலம் கடத்தும் முயற்சிக்கு முற்றுப்புள்ளி வைகக் வேண்டும் என்று பி.ஆர்.பாண்டியன் கூறினார். தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் மன்னார்குடியில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழக அரசு வழக்கறிஞர்கள் நேற்று உச்சநீதிமன்றத்தில் காவிரி நடுவர் மன்ற இறுதி தீப்பை பின்பற்றி முழு அதிகாரம் கொண்ட காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதையும், நிர்வாக அலுவலகம் டெல்லியில் அமைக்கவும், மத்திய அரசு இறுதி முடிவு எடுப்பதை தடுத்திட  முன்வைத்த திருத்தங்களை நீதிபதிகள் ஏற்று  புதிய செயல் திட்டம் தாக்கல் செய்ய மத்திய அரசிற்கு உத்தரவிட்டுள்ளதை வரவேற்கிறோம்.

வழக்கறிஞர்களுக்கும், முதலமைச்சர் உள்ளிட்ட தமிழக அரசு உயர் அலுவலர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறோம். மேலும், அணைகளின் பராமரிப்பு மற்றும் புதிய அணைகள் கட்டுவதனால் சம்பந்தப்பட்ட மாநிலங்கள் மேலாண்மை வாரியத்தின் அனுமதியை பெற வேண்டும் என்று உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள அறிவுரையை உத்தரவாக மாற்றம் செய்ய வேண்டும். மேற்கண்ட திருத்தங்களோடு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் அறிக்கைைய உடனடியாக மத்திய அரசிதழில் வெளியிட்டு செயல்பாட்டிற்கு கொண்டு வருவதுடன், ஜூன் 12ல் மேட்டூர் அணை  திறக்கும் வகையில் தண்ணீரை பெற்று தர நீதிமன்றத்தில் வலியுறுத்துவதன் மூலமாக, மத்திய அரசு ஜூலை மாதம் வரை காலம் கடத்தும் முயற்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-05-2018

    23-05-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • Tuticorinturnsviolent5

    கலவர பூமியாக மாறிய தூத்துக்குடி: துப்பாக்கிச் சூட்டில் உயிரிழப்பு 5 ஆக உயர்வு

  • Anaithukkatchikootam

    திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தின் புகைப்படங்கள்

  • tributeUSgunfiredied

    அமெரிக்கா துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு உறவினர்கள், நண்பர்கள் அஞ்சலி

  • ThooothukudiSterliteProtest

    போர்க்களமானது தூத்துக்குடி..ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் கல்வீச்சு...துப்பாக்கிச்சூடு: ஒருவர் பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்