SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தங்கம் விலையில் அதிரடி மாற்றம் ஒரே நாளில் சவரனுக்கு ரூ264 குறைந்தது

2018-05-17@ 03:13:53

சென்னை : தங்கம் விலை நேற்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ264 குறைந்தது.  தங்கம் விலை கடந்த 2 மாதங்களாக ஏறுவதும், இறக்குவதுமாக இருந்து வருகிறது. சில நேரங்களில் யாரும் எதிர்பார்க்காத வகையில் உயர்வதுமான போக்கும் காணப்பட்டு வந்தது. அதாவது, கடந்த 19ம் தேதி தங்கம் விலை ஒரு சவரன் ரூ24,040க்கு விற்கப்பட்டது. இந்த விலை உயர்வு 17 மாதங்களுக்கு பிறகு புதிய உச்சத்தை தொட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு தங்கம் விலையில் திடீர், திடீரென்று மாற்றங்கள் காணப்பட்டன. இந்த நிலையில், கடந்த 12ம் தேதி ஒரு சவரன் தங்கம் ரூ24,120க்கு விற்கப்பட்டது. தொடர்ந்து 14ம் தேதி ஒரு சவரன் தங்கம் ரூ24,064க்கும், 15ம் தேதி (நேற்று முன்தினம்) ரூ24000 என்று தங்கம் விலை சரிந்து வந்தது. நேற்று தங்கம் விலை அதிரடியாக சரிவை சந்தித்தது. அதாவது, கிராமுக்கு ரூ33 சரிந்து ஒரு கிராம் ரூ2,967க்கும், சவரன் ரூ264 குறைந்து ஒரு சவரன் ரூ23,736க்கும் விற்கப்பட்டது.

ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ264 அளவுக்கு குறைந்திருப்பது நகை வாங்குவோரை சற்று சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது. இதுகுறித்து சென்னை தங்கம், வைரம் வியாபாரிகள் சங்க பொது செயலாளர் சாந்தகுமார் கூறியதாவது: தங்கத்தில் முதலீடு செய்துள்ள பெரும் முதலீட்டாளர்கள் தங்கள் முதலீட்டை வேறு பக்கம் திருப்பியுள்ளனர். அதாவது பங்கு சந்தை, வர்த்தகம் உள்ளிட்டவற்றில் முதலீடு செய்ய தொடங்கியுள்ளனர். அது மட்டுமல்லாமல் உலக சந்தையில் தங்கத்திற்கான தேவையும் குறைந்துள்ளது. இதுபோன்ற காரணங்களால் கிராம் ரூ3000 அளவுக்கு மேல் விற்ற தங்கம், இப்போது ரூ3,000க்கு கீழ் விற்பனையாகி வருகிறது. இன்னும், ஒன்றிரண்டு நாட்கள் விலை குறையும். அதன் பிறகு தங்கம் விலை உயரத்தான் வாய்ப்புள்ளது என்றார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 16-06-2019

    16-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 15-06-2019

    15-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • china

    சீனாவில் பாலம் சரிந்ததால் 2 வாகனங்கள் தண்ணீரில் மூழ்கியது: மூழ்கியவர்களை தேடும் பணி தீவிரம்

  • oaman_thee11

    மர்ம தாக்குதல்களால் ஓமன் வளைகுடா பகுதியில் தீப்பற்றி எரியும் எண்ணெய் கப்பல்கள்

  • AftermathProtestHK

    ஹாங்காங்கில் அரங்கேறும் தொடர் போராட்டங்களால் அலங்கோலமாகும் நகரும்..: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்