SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

விரிஞ்சிபுரம் வேளாண் ஆராய்ச்சி நிலையத்தில் இருந்து மொரீஷியஸ் நாட்டுக்கு செல்லும் இலவம்பாடி கத்தரிக்காய் விதை

2018-05-17@ 03:13:02

வேலூர் : மொரீசியஸ் நாட்டுக்கு ஏற்றுமதியாகும் வேலூர் இலவம்பாடி கத்தரிக்காய் விதை கிலோ ரூ3 ஆயிரத்திற்கு அங்கு விற்பனை செய்யப்படுகிறது.
 வேலூர் மாவட்டம் இலவம்பாடி முள்கத்தரிக்காய்க்கு அதன் தனிப்பட்ட ருசியின் காரணமாக பொதுமக்கள் இடையே தனி இடம் உண்டு. வேலூர், திருவ்ணணாமலை மாவட்டங்களில் மட்டும் பயிரிடப்படும் இலவம்பாடி முள்கத்தரி தமிழகம் முழுவதும் விற்பனை செய்யப்படுகிறது. வேலூர் மாவட்டத்தில் உள்ளவர்கள் வெளியூர்களில் வசிக்கும் உறவினர்களின் வீட்டுக்கு செல்லும் போது இலவம்பாடி கத்தரிக்காய் வாங்கி செல்வதும் வழக்கம்.

வேலூர் அடுத்த விரிஞ்சிபுரம் வேளாண் ஆராய்ச்சி நிலையத்தில், இலவம்பாடி முள்கத்தரி தவேபக முள்ளுக்கத்தரி விஆர்எம்-1 என்ற ரகம் கத்தரிக்காய் விதைகள் மொரீசியஸ் நாட்டிற்கு அனுப்பப்படுகிறது. இதுகுறித்து வேளாண் ஆராய்ச்சி மைய அதிகாரிகள் கூறுகையில், ‘வேலூர் இலவம்பாடி கத்தரிக்காய்க்கு விதை மொரீசியஸ் நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஒரு கிலோ விதை ரூ3 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு ஏக்கரில் கத்தரிக்காய் பயிரிட 150 கிராம் விதை போதுமானது. இதனால் விவசாயிகளுக்கு நல்ல மகசூல் மற்றும் வருமானம் கிடைக்கிறது’ என்றனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 15-08-2018

    15-08-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • chinaearthquake

    சீனாவின் யுன்னான் மாகாணத்தில் நிலநடுக்கம்: 18 பேர் காயம்

  • meteorshower

    ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் விண்கல் மழை: வானில் நிகழ்ந்த அதிசயம்

  • indonesiaafterquake

    இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் பாதிப்பு: மக்களின் வாழ்வாதாரம் முடக்கம்

  • sijaapanda

    சீனாவில் சிஜ்ஜா பாண்டா கரடியின் 12-வது பிறந்தநாள் கொண்டாட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்